Sunday, August 23, 2009

வலி

எல்லாரையும் சற்று தள்ளி
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை
குப்புறடித்து விழுந்து விட்ட போது
பதறாதிருக்க அனைவரையும் சைகித்தவள்,
விழுந்ததை எல்லாரும் பார்த்த வலியினும்
விழுந்த வலியின் வலியொன்றும்
பெரிதல்ல
என்றுணர்ந்தவள்,
அம்மா எனப்படுகிறாள்.



6 மறுமொழிகள்:

TKB காந்தி August 24, 2009 at 5:41 PM  

நல்லா இருக்கு மதன்

மதன் August 24, 2009 at 11:21 PM  

நன்றிங்க காந்தி.

யாத்ரா August 25, 2009 at 10:29 PM  

நல்ல நுட்பமான உணர்வு, நல்ல கவிதை மதன்.

மதன் August 25, 2009 at 11:07 PM  

நன்றி யாத்ரா.

பா.ராஜாராம் September 3, 2009 at 6:52 AM  

ரொம்ப நல்லா இருக்கு மதன்.

மதன் September 9, 2009 at 10:54 AM  

பா.ரா மிக்க நன்றி.

  ©Template by Dicas Blogger.

TOPO