குழந்தை மரம்
தின்றுகொண்டிருந்த
பழ மும்முரத்துக்கும்
வாயோர வடிதலின்
வடவடப்புக்கும் இடையே
"கொட்டைய முழுங்குனா
வயித்துல மரம் வளருமாப்பா.."
காதோரமாய் காத்திருந்த கேள்வியொன்று
நினைவுக்கு வந்தவளாகக் கேட்டாள்.
என் ஆமோதித்தலின்
நொடி விதை வெடிப்பில்
அவள்
வயிற்றில் வேர்பதித்து
தலை வெளி
கிளை பரப்பி
பரிபூரணத் தருவாக
விரிந்து நின்றது
அவள்
ஊஞ்சலாடிய மரமொன்று
கனிந்திருந்த
அதன் பழங்களைப்
பறித்துப் பிரீதியுடன்
தின்னத் தொடங்கினாள்
கொட்டைகளுடன்.
6 மறுமொழிகள்:
அருமையான கவிதை நண்பரே!
நன்றி சென்ஷி!
வயிற்றில் வேர்பதித்து
தலை வெளி
கிளை பரப்பி
பரிபூரணத் தருவாக
விரிந்து நின்றது
அவள்
ஊஞ்சலாடிய மரமொன்று
அருமை
நன்றி விநாயக முருகன்.
உங்களைப் போன்ற செறிவான கவிஞர்கள் பாராட்டுவது ஊக்கமளிக்கிறது.
எதிர்பாராத காட்சிமாற்றம்.. நல்லாயிருக்குங்க உங்க கவிதை
நன்றிங்க அஷோக்.
Post a Comment