Tuesday, June 29, 2010

அழகர்சாமி? ஆர்க்குட்? அசிங்கம்? அடப்போங்கய்யா.. என்னத்தனு பேரு வெக்க!


இன்றைய இளைஞர்களில் சிலரின் தரக்குறைவான நடத்தை பற்றிய என்னுடைய முந்தைய பதிவை இங்கே பார்க்கலாம். இது பார்ட்-II என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

மேட்டர் இதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஃபார்வர்ட் மின்னஞ்சலில்தான் அறிமுகமானார் அழகர்சாமி காத்தவராயன். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். இவருடைய மகனுக்குப் பெண் தேட ஆர்க்குட்டில் ஒரு கம்யூனிட்டியைத் துவக்குகிறார்.

ஆர்க்குட் ஒரு சோஷியல் நெட்வொர்க்கிங் சைட். அதாகப்பட்டது சமூக நட்புறவு வலைத்தளம். இங்கு வந்து இவர் ஏன் தன் மகனுக்குப் பெண் தேடுகிறார் என்ற சந்தேகத்துடனேயே அவருடைய ஸ்க்ராப் புக்கைத் திறந்தால் நமக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

சகிக்க / பிரசுரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளிலெல்லாம் இவரைப் போட்டுக் காய்ச்சியெடுக்கிறார்கள் நம்முடைய so called இளைய தலைமுறையினர். அதாவது இவருக்கு ஆர்க்குட்டைப் பற்றித் தெரியவில்லையாம். இவரே ஒரு டப்பாத் தலையராம் (இதுதான் அங்கு இருப்பதிலேயே டீஸண்ட்டான வார்த்தையாக இருக்கிறது!). இவருக்குப் பெண் கிடைத்ததே பெருசாம். இந்த லட்சணத்தில் இவர் பையனுக்கு வேற பொண்ணு பாக்க வந்துட்டாராம். இவருக்கு ஆர்க்குட்டெல்லாம் ஒரு கேடா.. எனபதுதான் இவர்களின் பொதுவான நிலைப்பாடாக இருக்கிறது.

இதற்கு மேல் அங்கிருக்கும் ஸ்க்ராப்களை நீங்கள்தான் போய் படித்துக் கொள்ள வேண்டும். சாம்பிளுக்கு இந்தப் பக்கத்தை வேண்டுமானால் பாருங்கள். Vomit bag இருந்தால் அருகே வைத்துக் கொள்ளல் நலம்.

-

இந்த ப்ரொஃபைல் குறித்து இதுவரை எனக்குப் புரிந்தவைகள் பின்வருமாறு. முதலில் இது ஒரு fake ப்ரொஃபைல். முகம் தெரியாதவர்களின் புகைப்படங்களைக் கொண்டு இவனுங்களா அழகர்சாமி காத்தவராயன் என்றொரு டுபாக்கூர் ப்ரொஃபைலை க்ரியேட் செய்திருக்கிறார்கள். பெயர், புகைப்படம் என்று எல்லாமே எள்ளலுக்குரிய வகையிலேயே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அப்புறம் இவனுங்களா ஒரு பையன் ப்ரொஃபைல் (கனகரத்தினம் அழகர்சாமி). இவனுங்களா ஒரு அம்மா ப்ரொஃபைல் (அழகர்சாமியின் மனைவி தமிழரசி அழகர்சாமி என்ற பெயரில். Fake ப்ரொஃபைலுக்கு வெச்சானுங்க பாரு பேரு!). அப்புறம் இவனுங்களா முருகேசன் என்ற இன்னொரு மகனுக்குப் பெண் தேட wife for Murugesan என்ற பெயரில் ஒரு கம்யூனிட்டியும் க்ரியேட் செய்து அதை ஃபேமஸும் ஆக்கியிருக்கிறார்கள்.

எதுக்கு?

எல்லாம் விளம்பரத்துக்குத்தான். ஒரு தனியார் இணையதளம் செய்திருக்கிறது இத்தனை கூத்தையும். நம் மக்கள்தான் எதையாவது பார்த்து விட்டால் ஒடனே ஸ்க்ரீன் ஷாட்டெடுத்து மெயில்ல போட்டு, நாந்தான் மொதல்ல பாத்தேன்னு பல்லிளித்துக்கொண்டு ஊருக்கே அனுப்பும் கூட்டமாயிற்றே. இப்படியே ஃபார்வர்டில் பிரபலமாகி, வந்து பார்க்கும் இளஞ் சிங்கங்கள் எல்லாம் கண்ட மேனிக்குக் கெட்ட வார்த்தை ஸ்க்ராப்புகளைப் போட்டுப் போட்டு, அகில உலக ஃபேமஸாகி விட்டார் அழகர்சாமி.

சரி எல்லாம் செய்தார்களே. அந்த மூன்று ப்ரொஃபைல்களிலும் போட்ட புகைப்படங்களுக்கு உரியவர்களை நினைத்துப் பார்த்தார்களா? அவர்களோ, அவர்கள் பிள்ளைகளோ, உறவினர்களோ இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால் என்னத்துக்கு ஆகும்? எவ்வளவு அவமானம் அது அவர்களுக்கு?

அதை விட அவமானமாக இருக்கிறது எனக்கு. இது போன்ற ஒரு இளைஞர் பட்டாளத்தில் ஒருவனாகத்தானே நானும் கருதப்படுவேன் என்று நினைத்தால்.

அழகர்சாமி ப்ரொஃபைல் மட்டுமல்ல. மூன்று ப்ரொஃபைல்களின் ஸ்க்ராப் புக்குகளையுமே படிப்பவர்கள் கூசிப்போகுமளவுக்குக் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள் நம் பையன்கள். பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன. அவர்களும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஹேய் மாமா.. உன் பையன் சூப்பராயிருக்கான்.. கட்டித் தரியா என்ற ரேஞ்சுக்கு.

இணையத்திலும், வலையுலகிலும் அனானிகளாக வந்து ஆபாசங்களை அரங்கேற்றுவதைப் பல நூறு முறை கண்டிருக்கிறோம். ஆனால் இங்கோ நிஜ ப்ரொஃபைலிலேயே வந்து, கூடியுட்கார்ந்து கும்மியடிக்கிறது நம் இளைஞர் சமுதாயம்.

ஒரே ஆறுதல் என்னவென்றால் இந்த விளம்பர வேகம் ஓரளவுக்கு மட்டுப்பட்டுக் கடைசி ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த ஸ்க்ராப்பும் வரவில்லை. இருந்தாலும் இவைகளையெல்லாம் டெலிட் செய்து தொலைந்தார்களென்றால் தேவலை. நானே ஒரு ஆறேழு முறை அப்யூஸை ரிப்போர்ட்டி விட்டேன் ஆர்க்குட்டுக்கு. ஒன்றும் நடந்த பாட்டைத்தான் காணோம்.

நீங்களே சொல்லுங்கள்.. யாரைக் குற்றம் சொல்வது .. விளம்பரத்துக்காக எல்லாவற்றையும் துவக்கியவர்களையா.. இல்லை.. ஒரு public forumல் இப்படி லோக்கலாக நடந்து கொண்டவர்களையா?

வெட்கக் கேடு!

-

தொடர்புடைய லிங்க்குகள்


அழகர்சாமி
அவர் மகன்
அவர் மனைவி
அவர் தொடங்கிய கம்யூனிட்டி

Read more...

Monday, June 28, 2010

விகடனில்!

ஜன ரஞ்சகமான ஒரு எழுத்து ஊடகத்தின் ஓரத்தில், ஒரே ஒரு கவிதை வந்ததற்கே துள்ளிக் குதித்த மனதைக் கண்டபின், பாப்புலாரிட்டி எனும் போதைக்காக மசாலாப் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹீரோக்களின் மீதான என் கோபத்தின் அர்த்தமின்மையை உணர்ந்தேன் ஒரு மாதத்திற்கு முன்பு என்னுடைய ஒரு கவிதை விகடனில் பிரசுரமானபோது!

சுகுணாவின் முகவரி தந்து, கவிதைகள் அனுப்பச் சொன்ன பா.ரா-வுக்கும், சுகுணாவுக்கும் நன்றி.


இனி கவிதை!


சாகா முத்தங்கள்


உன் முத்தத்துக்கும்,
முத்தத்தின் சத்தத்துக்கும்
நடுவே நான்
செத்து விட வேண்டும்
என்றேன்


சத்தம் வராத முத்தங்களில்
சாகா வரமளிக்கிறாள்
அன்று முதல்!

Read more...

Saturday, June 26, 2010

நிழற்படம் ஒன்றும், நிஜப்பாடல் ஒன்றும்!

மிகச் சாதாரணமாகக் கடந்து போக வேண்டிய தருணமொன்று எதிர்பாராமல் அடர்வேறி, நம்மைப் புரட்டிப் போட்டு விட்டு அருகேயே நின்று மலங்க மலங்க விழிக்குமே உணர்ந்திருக்கிறீர்களா? அந்த ஒரு கணத்திற்கு முன்னாலிருந்த லாவகம் எங்கே தொலைந்ததென்று புரியாமல், கூட்டத்தில் கையைத் தொலைத்த குழந்தையாய் தவிக்கும் தருணங்கள் நினைவிருக்கிறதா?

அலுவலகம் முடிந்து எப்பொழுதும் இண்டிகாவிலோ இல்லை சுமோவிலோ வருவது வழக்கம். நேற்று நமக்கென்று வாய்த்தது ஒரு டெம்போ ட்ராவலர். இது சற்று பெரிய வண்டியாதலால் தெருக்கோடியில் தான் இறங்கிக் கொள்ள வேண்டும். இரவு ஒரு மணி. நான் பாட்டுக்கு இறங்கி நடந்து போய்க் கொண்டிருக்கையில்தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

காட்சி புரியவே சில நொடித் துளிகள் பிடித்தன. புலப்பட்ட பின் அலையலையாய் கொட்ட ஆரம்பித்த எண்ணக் குழைச்சல்களிலிருந்து விடுபட சில நிமிடங்கள் தேவைப்பட்டன. முன்னர் நானே எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. பகிர்தலின் தளத்தில்தான் வாழ்வு பல்கிப் பெருகுகிறதென்று.



அப்படியே நின்று விட்டேன். புகைப்படம் எடுக்கையில் ஏனோ சற்று உறுத்தியது. என்னதான் இது போன்ற ஆயிரம் புகைப்படங்கள் இணையத்திலும் இன்ன பிற ஊடகங்களிலும் காணக் கிடைக்கும் என்றாலும், நாமே நேரில் கண்டடையும் அனுபவம் சிலிர்க்கத்தான் வைத்து விடுகிறது.

அந்த நைந்து போகாத கம்பளிக்குள் நாய்க்கும் தஞ்சமளித்த நவயுக புத்தனை, அவர் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. கம்பளியை விலக்கி இரண்டு தூக்கங்களைக் கெடுக்க மனமிலையாதலால் வந்து விட்டேன்.

அதிகாலைக் குளிரில், பிளாட்பாரத்தில் எல்லாவற்றையும் மறந்து தூங்கும் மனசு வாய்க்கப் பெற்றதே.. அது போன்றதொரு இலகுவை எனக்கும் தர மாட்டாயா என்று முன்னாலிருந்த பிரசன்ன ஆஞ்சநேயரைக் கேட்டு விட்டு வந்தேன். வேறென்ன செய்ய?

-0-

ஆங்கிலப் பாடல் எதுவும் இதுவரை நான் கேட்டதில்லை. முதல்முறையாக ஷகிராவின் வக்கா வக்காவைக் கேட்டுவிட்டுப் பித்துப் பிடித்தாற் போலாகியிருக்கிறேன். என்னா பாட்டு.. என்னா வரிகள்.. And ofcourse.. என்ன்னா ஒரு ஆட்டம்.. வாய்ப்புகளே இல்லை!

நேற்று தொட்டு, இன்று மட்டும் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே தெரியாது. முழுவதுமாய் வசீகரித்து எனை தனக்குள் விழுங்கி விட்டது இந்தப் பாடல். ஷகிராவுக்கு 33 வயதாம். என்னால் நம்பவேஏஏ முடியவில்லை. ஷ்ருதிஹாசன் சரீரத்திலும், சாரீரத்திலும் ஷகிராவின் சாயல் தென்படுவதாகத் தோன்றுகிறது.



இணையத்தின் புண்ணியத்தில் வரிகள் பின்வருமாறு:

You're a good soldier
Choosing your battles
Pick yourself up
And dust yourself off
And back in the saddle

You're on the frontline
Everyone's watching
You know it's serious
We're getting closer
This isnt over

The pressure is on
You feel it
But you've got it all
Believe it

When you fall get up
Oh oh...
And if you fall get up
Oh oh...

Tsamina mina
Zangalewa
Cuz this is Africa

Tsamina mina eh eh
Waka Waka eh eh

Tsamina mina zangalewa
Anawa aa
This time for Africa

Listen to your god
This is our motto
Your time to shine
Dont wait in line
Y vamos por Todo

People are raising
Their Expectations
Go on and feed them
This is your moment
No hesitations

Today's your day
I feel it
You paved the way
Believe it

If you get down
Get up Oh oh...
When you get down
Get up eh eh...

Tsamina mina zangalewa
Anawa aa
This time for Africa

Tsamina mina eh eh
Waka Waka eh eh

Tsamina mina zangalewa
Anawa aa

Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

கால்பந்துக்கு மட்டுமல்ல. சில சூறாவளி சமயங்களில் நம் கிளைகளை மீட்டெடுக்கவும் உதவும் வரிகள். அதிலும் But you've got it all.. Believe it..  என்ற வரியைப் பாடும்போது நெடுமட்டமாய் அசையும் ஷகிராவின் முகம் தரும் தன்னம்பிக்கையை எழுதி விளக்க முடியுமென்று தோன்றவில்லை. பார்த்து வேண்டுமாயின் உணரலாம்.

இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட முயலும் செம்மொழி வீடியோவைக் காட்டிலும், சத்தியமாய் 100 மடங்கு பரிந்துரைக்கலாம்.

பாடலைக் காண க்ளிக்கவும்!

Read more...

Thursday, June 17, 2010

பதிவுலக நண்பர்களும், பகிர வேண்டிய சில நன்றிகளும்!

ஏறத்தாழ இரண்டாண்டுகளாக வலையில் எழுதி வந்தாலும் நான் ஒரு சொல்லிக் கொள்ளும்படியான பதிவன் என்றெனக்குத் தோன்றவில்லை. தொடர்ச்சியாக எழுதுவதில்லை. எழுதுவதும் உருப்படியாக இல்லை. சக பதிவர்கள் எவரையும் சந்தித்ததில்லை. பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டதில்லை. இலக்கியக் கூட்டங்களைப் பார்த்ததேயில்லை. ப்ப்பா.. எத்தனை இல்லைகள்!

அண்ணன் ஜோ அவர்கள் சில முறை பெங்களூர் பதிவர்கள் சந்திப்புக்கு அழைத்தார். என்னால்தான் சில தனிப்பட்ட காரணிகளால் கலந்து கொள்ள முடியவில்லை. பதிவர் சந்திப்புக்கு வராமல் நான் பெண் நண்பிகளுடன் (!) ஊர் சுற்றுவதாக அவதானித்து தன்னுடைய கூர் நுண்ணுணர்வின் வன்மையை நிரூபித்தார் அண்ணன் ஜோ அவர்கள்! அவர் வாக்கு பலித்தால் காதற் கடவுளாம் Eros-க்குப் பொங்க வைத்து சாமி கும்பிடுவதாக இந்த நேரத்தில் வேண்டிக் கொள்கிறேன்.

இன்னும் நிறைய எழுத வேண்டும். இனியாவது வாசிக்கத் துவங்க வேண்டும். இவை போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய.. நேரமில்லை என்று சொல்ல மாட்டேன். மாறாக, சோம்பேறித்தனம் என்பதை ஒப்புக் கொள்வேன்.

இந்தச் சூழ்நிலையில் நான் சந்திக்க நேர்ந்த ஒரே பதிவர் அண்ணன் ஜீவா aka ஜீவ்ஸ் அவர்கள். பதிப்பித்த புத்தகங்களில் எனக்குத் தரவேண்டிய புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு அண்ணன் பொன்.வாஸ் அவர்கள் பெங்களூர் வந்த போதென்று பார்த்து நான் கோவைக்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆக அவரையும் சந்திக்க முடியவில்லை.

புத்தகங்களை ஜீவ்ஸிடம் கொடுத்துச் சென்றிருந்தார் வாசு அண்ணன். அவைகளை வாங்கச் சென்ற போதுதான் ஜீவ்ஸைப் பார்த்தேன்.
கூரான கண்கள். நேர்த்தியான வார்த்தைகள். வீடு முழுக்கப் புத்தகங்கள். இனிமையான நண்பர் ஜீவ்ஸ். கிட்டத்தட்ட ஒரு மாதம் புத்தகங்களை வைத்திருந்ததற்கு அவருக்கு நன்றி!

-0-

சென்ற முறை கோவைக்குச் சென்றிருந்த போதுதான் கலாப்ரியாவுக்காக விஷ்ணுபுரம் நண்பர்கள் நடத்திய கூட்டம் நிகழ்ந்தது. செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் பாருங்கள்.. தூங்கித் தொலைத்து விட்டேன். ஞாயிறு இரவு கிளம்புகையில்தான் காந்திபுரத்தில் வலை நண்பர்கள் அந்நிகழ்வு குறித்து வைத்திருந்த ஃப்ளெக்ஸைப் பார்த்தேன்.

சந்தோஷமாக இருந்தது நிறையவே. ஊரெங்கும் குறிப்பிட்டவொரு மாநாட்டுக்கு அழைக்கும் போர்வையில் நிகழ்ந்திருந்த சுயமோக விளம்பரங்களை, கொள்கைக் கூவ(ங்)ல்களைக் கண்டு அடைந்திருந்த அலுப்புணர்வுக்கு செல்வேந்திரனும், வா.மணிகண்டனும் இன்னும் சிலரும் ஆறுதலளித்தார்கள். நிகழ்ச்சியை நடத்தியதோடு, அதற்கும் சேர்த்து அவர்களுக்கு நன்றி. மனதார!

-0-

அதே கோவை வாசத்தின் போது, அன்னபூர்ணாவில் அம்மாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒரு தொலைபேசி அழைப்பு. அண்ணன் பா.ரா சவுதியிலிருந்து அழைத்து, என் புத்தகத்தைப் படித்ததாகவும், நன்றாக இருந்தது என்றும் பாராட்டினார். வாழ்த்தினார். நான் பேசிவிட்டு வைத்ததும், என் பேச்சிலிருந்து நடந்ததைப் புரிந்து கொண்ட அம்மாவின் கண்களில், மகனின் புத்தகத்தை ஒருவர் கண்காணாத தொலைவிலிருந்து அழைத்துப் பாராட்டுவதைக் கண்ட புளகத்தின் ஈரம் தெரிந்தது. என்னைப் பாராட்டியதை விட, இதற்குத்தான் நான் பா.ரா-வுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி பா.ரா!

-0-

சரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் என் அலுவலக நண்பனொருவன் அவனுடைய நண்பரொருவர் CA இறுதித்தேர்வுக்காக திருப்பூரில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் நான் கோவையென்பதால் என்னால் உதவ முடியுமா என்றும் கேட்டான். அந்த நண்பர் சிரமப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் அவன் குறிப்பிட மறக்கவில்லை. என் நண்பனும், அவன் நண்பரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். எனக்கோ திருப்பூரில் யாரையும் தெரியாது. சரி முயற்சிக்கிறேன் என்று மட்டும் கூறி வைத்தேன்.

திடீரென ஒரு மின்னல். கொஞ்சம் பழைய சமீபத்தில் சகோதரி அன்புடன் அருணா அவர்கள் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு பதிவர் கம் மருத்துவர் புரூனோ மற்றும் சில நண்பர்கள் உதவியதைப் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. மேலும் சிங்கை நண்பர் ஒருவரின் உயிரைக் காக்கவெல்லாம் வலையில் உதவுகிறார்களே.. நாம் ஏன் பதிவுலகில் முயற்சிக்கக் கூடாது என்று யோசித்ததில் என் சிற்றறிவுக்குத் தட்டுப்பட்டது அண்ணன் பரிசலும், வெயிலானும்தான். திருப்பூர் பதிவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் எனக்கு வேறு யாரையும் தெரியாது!

சரியென்று அவர்கள் தளத்திலேயே முகவரியைத் திருடி, ஒரு மின்னஞ்சல்தான் அனுப்பினேன். சற்று நேரத்திலேயே பரிசல் ஃபோன் செய்தார். கொங்குத் தமிழ் வாசத்தில் 'வரச் சொல்லுங்க.. பாத்துக்கலாம்' என்றார்.

'எம்மேல நம்பிக்க இருக்கல்ல.. நீங்க நேரா ரெக்கார்டிங் தியேட்டர் வந்துடுங்க' என்று ட்யூன் ஓக்கே ஆகும் முன்பே ராஜா சார் கண்மணி அன்போடு பாடலின்போது கமல்ஹாசனிடம் சொன்னது நினைவுக்கு வந்தது எனக்கு.
உபயம்: யூ ட்யூப்!

தேர்வு நடக்கவிருந்த ஜீவாபாய் மேனிலைப்பள்ளியருகேயே, தெலுங்கு பேசும் ஒருவருடனேயே தங்க வைத்து, எல்லா உதவிகளையும் செய்து வைத்திருக்கிறார் பரிசல். தேர்வுகளை முடித்துக் கொண்டு ஊருக்குச் சென்ற அந்நண்பர் ஃபோனில் எனக்கு நன்றி சொன்னபோது நெகிழ்ச்சி கேட்டது. அண்ணன் பரிசலுக்கும், வெயிலானுக்கும் நன்றி!

சரியான நேரத்தில் செய்யப்படும் உதவிக்கு, சரியான நேரத்திலேயே நன்றியும் செய்யப்பட வேண்டும். அவ்வகையில் நேரந்தப்பி நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். பணிப்பளு மற்றும் இதர பல பிரச்சினைகளின் காரணமாக. பரிசலும், வெயிலானும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்!

சந்திப்போம்!

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO