கல்லுறைவின் கருமாதிகள்
மீளாத் துயில்களின்
ஆழ்ந்த சூன்யத்தின் சொரூபங்களில்
உறைந்து நிற்கும்
கற்பிம்ப சித்திரங்கள்
அல்லது சித்தரிப்புகள் உங்களுக்கு
இறுகிய சிந்தனா பாவ
செரிப்புகளைப் பழக்கமுறுத்தலாம்.
சிற்பங்களாகவும் புலன் பெறும்
அவற்றைக் கடக்கும் நாட்கள்
வெற்றைக் கொண்ட சுய நிரப்பலின்
புற ஊதா
புறமூதாக் குதிர்களுக்குள்
இல்லாத ஆக்ஸிஜனை
இருட்டுக்குள் தொலைத்த பின்
காலக்கல்லில் உருளிக் குழைந்த
சிற்பங்கள் சுவாசிக்காமல்
சாவதே மேல்
உறைவு
கல்லுக்கா
காலத்துக்கா
பதிலில்லை
வாருங்கள்
ரசிப்பின் சாதலினுள்
சிற்பத்தின் சாதலை
ரசிப்போம் சற்று.
புகைப்படத்தில் விஷகன்னிகா, பேளூர், கர்நாடகா.
3 மறுமொழிகள்:
கவிதை ரொம்ப நல்லா இருக்கு மதன்.
நல்லா இருக்குங்க
நல்ல புனைவுத்திறன் உங்களுக்கு..
யாத்ரா - நன்றிகள்!
நேசமித்ரன் - புனைவு அப்புறம் திறனா.. காமெடி பண்ணலயே நீங்க! :)
Post a Comment