Thursday, August 6, 2009

உறுவலிக் குறிப்பு

உயிர்ச்சுருளினைத் உருவித்
தூரத் தூக்கியெறியும் வேளை
ஒரு குறிப்பெழுத முற்படுகிறேன்

அகத்தடவல்களுக்கான மயிலிறகுகள்
நரகத்தின் ஏதேனும் ஒரு கொடுமுகட்டில்
நீ ஒளித்து வைத்த
புத்தகத்திற்குள் இருக்கலாம்
அதே பக்கத்தில் துவங்கும்
என் ஊழுக்கான பதிலிடல்கள்
அத்தியாயங்களாக நீட்சியுறலாம்.

நீயழிந்து போன
நீ என்ற
சொற்பிடியிலிருந்து சுயவிடுதலை
செய்து கொள்ளவேனும்
அக்குறிப்பை எழுத விழைகிறேன்.

உன் புத்தகத்தின் இன்னுமொரு
பக்கம் என் குறிப்புக்காகக் காத்திருக்கும்.

உயிரோசை 10/08/2009 மின்னிதழில் பிரசுரமானது.



9 மறுமொழிகள்:

Joe August 6, 2009 at 9:57 PM  

ஒன்னும் புரியலேன்னு ஒரு பயலும் பின்னூட்டம் போடலையோ?

நல்ல கவிதை, வாழ்த்துக்கள்!

யாத்ரா August 6, 2009 at 11:37 PM  

ரொம்ப நல்லா இருக்கு மதன்.

ஆ.சுதா August 7, 2009 at 8:58 AM  

நல்லா இருக்கு மதன்.

நேசமித்ரன் August 7, 2009 at 2:49 PM  

நல்ல இருக்குங்க மதன் .செதுக்கி இருக்கீங்க வார்த்தைகளை

மதன் August 10, 2009 at 6:32 AM  

வாங்க ஜோ.. இந்த பின்னூட்டம், ஹிட்ஸ் இதெல்லாம் எனக்கு வராது. ’அதுல எல்லாம் என்னவோ நம்பிக்கை இல்லை’னு கூட கமல் மாதிரி சொல்லிக்கலாம்!

நம்ம திருப்திக்காக நம்ம எழுதறோம்.. அவ்ளோதான்! :)

பாராட்டுக்கு நன்றிங்க..

யாத்ரா - வழக்கம் போல் நன்றி. உங்க உயரத்துக்கு இல்லனாலும், எத எழுதினாலும் பாராட்றிங்க அப்டிங்கறது உங்க பெருந்தன்மையைக் காட்டுது.

ஆ.முத்துராமலிங்கம், நேசமித்ரன் -நன்றிகள்.

Joe August 10, 2009 at 8:54 AM  

//
இந்த பின்னூட்டம், ஹிட்ஸ் இதெல்லாம் எனக்கு வராது. ’அதுல எல்லாம் என்னவோ நம்பிக்கை இல்லை’னு கூட கமல் மாதிரி சொல்லிக்கலாம்!

நம்ம திருப்திக்காக நம்ம எழுதறோம்.. அவ்ளோதான்! :)
//
மத்த இடுகைகளில் அதிகம் பின்னூட்டங்கள் வந்திருக்கே? நம்மாளுக கவிதைன்னு ஏதாவது கிறுக்கினா தலை தெறிக்க ஓடிருரானுங்க.

உங்களுக்கு இருக்கிற மொழி ஆளுமை, சொற்களில் இருக்கும் வீரியம், ஆச்சர்யப்படுத்துகிறது நண்பரே!

தமிழ்ப் பதிவர்களில் நீங்கள் பெரியளவில் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

மதன் August 10, 2009 at 11:37 AM  

/*

நம்மாளுக கவிதைன்னு ஏதாவது கிறுக்கினா தலை தெறிக்க ஓடிருரானுங்க.

*/

ஒத்துக் கொள்கிறேன் ஜோ.

/*

தமிழ்ப் பதிவர்களில் நீங்கள் பெரியளவில் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

*/

சிரித்துக் கொள்கிறேன் ஜோ. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! :)

Joe August 10, 2009 at 6:24 PM  

//
சிரித்துக் கொள்கிறேன் ஜோ. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! :)
//

ஒரு பெரிய மனுஷன் வந்து பாராட்டிருக்கேன், சிரிக்கிறேங்கிறான்?
தம்பி, இது சிரிக்க வேண்டிய விஷயமில்ல, சிந்திக்க வேண்டிய விஷயம்! ;-)

மதன் August 11, 2009 at 12:49 AM  

சரிங்க தல.. உக்காந்து யோசிக்கறேன்! :)

  ©Template by Dicas Blogger.

TOPO