அவொ அப்பத்தா இன்னோன்னு?
சமணங்கால் போட்டு குக்காரைலெல்லா
மூணாங்கோப் ட்றாயர் முடிஞ்சுன்ன
காலுந் தொடயுந் தொட்டுக்கற
வெட்ட லேசா விரிச்சு
'இதென்னோனு தெரீமாடா'னு
கேப்பா லோகனாயகி.
'தெரியாதுடி களுத முண்ட'னு
கத்தியுட்ட்டனொரு நாளு
அன்னைக்கு சாய்ங்காலம்
'இதென்னோனு சொல்லாத்தா'னு
ஆத்தாகுட்டயே கேட்டதுக்கு
'ஆரு சொன்ன வெகரண்டா'னு
வெசாரிச்சுட்டு,
எளகிப்போச்சு எங்காத்தாளோடது
நீயே காட்றி நிமுண்டிக்கிறேன்-னு போயந்த
அமுக்குனிகுட்டயே கேட்டுக்கடா'னு
சோலிய நிறுத்தாம
சொல்லிப் போட்டுச்சு
அப்பத்தா
4 மறுமொழிகள்:
மதன் ... மற்ற இடுகைகளுக்கும் சேர்த்தே இந்தப் பின்னூட்டம் ... நன்றாக எழுதுகிறீர்கள் ... வாழ்த்துகள் ... தொடருங்கள் ...
அன்புக்கு நன்றி நந்தா..
இந்தக் கவிதை ரொம்ப நல்லா இருக்கு மதன், வட்டார வழக்கில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நுட்பமான பதிவு.
நன்றி யாத்ரா..!
Post a Comment