மன்னிப்புத் தேடல்
அப்பா ஊர்லயா என்ற கேள்வி
நண்பனுக்கு.
எங்கள் இருவருக்கும்
புதிதாய்த் தெரிய வந்திருந்த ஒருவனால்.
நண்பனை முந்திக் கொண்ட நான்
ஆமாம் என்று ஆட்டி வைத்தேன் தலையை.
அப்பா இருப்பது
மதுப் பழக்க மறுவாழ்வு மையத்தில்
என்ற உண்மையை மறைத்த
என் சமயோஜிதத்தின் பெருமை
வெட்கித்தது
அதைக் கவிதையாய் எழுதி
ஆறுதல் பரிசு வாங்குகையில்
மேடை முன்னிருந்த
இருவரையும் கண்டபோது.
எதற்கும் இருக்கட்டுமென்று
இதையும் எழுதி வைக்கிறேன்.
இன்னொரு பரிசு கிடைத்தால்
கூட ஆறுதலும் கிடைக்கும்.
2 மறுமொழிகள்:
எனக்குப் பிடிச்சிருக்குங்க இந்தக் கவிதையும்.
திரட்டிகளில் இணைவது அதிகப்படியான வாசகர்களை சென்றடைய ஒரு வழி. நீங்கள் இணைந்திருக்கிறீர்களா?
நீங்க சொன்னப்றம் தான் தமிழ் வெளி, தமிழ் மணம்-ல எல்லாம் join பண்ணேன் சுந்தர்.. இதுக்கு தான் உங்கள மாதிரி ஒரு அனுபவஸ்தர் வேணும்ங்கறது.. :) மீண்டும் நன்றிகள்..!!
Post a Comment