செத்த பேன்களும், சில தற்கொலைகளும்.
நகங்களின்
முத்தத்தில்
ஈரம்
ரத்தத்தில்.
புணர்ந்த நகங்களின்
ஸ்கலிதச் சிகப்பு
காய்ந்தும்,
காயாமலும்.
சதையிடுக்கில்
சிக்கி,
பல்வெறுக வெடித்தது
குரூரத் துணுக்கொன்று.
நகக்கண் பாவைதொட்டு
தோல்த்தள விளிம்புவரை
தத்தளிக்கிறது.
இல்லாத உரோமக்காடு தேடி
உயிர் சேமிக்க அவாவுறுகிறது.
ஒரு க்ஷணமேனும் எஞ்சுகிறது
சாதலுக்கும், சாதித்தலுக்குமான
இடைவெளித் தீர்மானிப்புக்கு.
உயிரோசை 10/02/2009 மின்னிதழில் பிரசுரமானது.
4 மறுமொழிகள்:
ஓஹ்.. நல்லா வந்திருக்குங்க கவிதை.
தங்கள் நேரத்திற்கும், பாராட்டுக்கும் நன்றி சுந்தர்..!
ரொம்ப நல்லா இருக்கு.
//இல்லாத உரோமக்காடு தேடி
உயிர் சேமிக்க அவாவுறுகிறது.//
நல்லா எழுதியிருக்கீங்க மதன்.
அனுஜன்யா
மிக்க நன்றி அனுஜன்யா. வருகைக்கும், நேரத்துக்கும்..!
Post a Comment