வயது
வேகமாய் வந்தவன்
பூட்டியிருந்த வீடு கண்டு
நண்பனை
சீக்கிரம் வர தொலைபேசிவிட்டு
ஜன்னல் திண்டில் சாய்ந்து
கண்மூடிக் கொண்டேன்.
ஏதேதோ உள்ளோடிற்று
இருட்டிமைத் திரையில்.
எதேச்சையாய்க்
கண்திறக்கக் கண்டேன்
முட்டிங்கால் வரை ஸ்கர்ட் போட்டிருந்த
எதுத்த வீட்டுப் பள்ளிப் பெண்
என்னையே வெறித்துக் கொண்டிருந்ததை.
செய்யாத குற்றம் மிதமாய் உறுத்த
காத்திருக்கத் தொடங்கினேன்
கண் மூடித் திரும்பவும்.
அவள் முட்டிங்கால் கீழ்வழமையில்
கன்னம் சறுக்கிச்
செல்தல் தவிர வேறேதும்
ஓடவில்லை இப்போது.
செய்த குற்றம்
உறுத்தவில்லை ஏனோ.
2 மறுமொழிகள்:
நிதர்சனமான உண்மை. ஒத்துக்கொள்பவர்கள் மிகச்சிலரே!
சிவா.. சும்மா கவிதை மட்டுந்தான். நீங்க வேற.. நிதர்சனம்.. அது.. இதுனுட்டு..:)
Post a Comment