Monday, July 27, 2009

கைப்பழக்கம், சுய இன்பம், சொப்பன ஸ்கலிதம், இன்ன பிற - சில உண்மைகள்!

குறிப்பு: சற்று நீண்ட கட்டுரை. மன்னிக்கவும்.

என் பள்ளி இறுதியாண்டில் (2002), ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத மாலை நேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். ரிமோட்டின் ஏதோவொரு பொத்தான் என்னை சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையில் கொண்டு தள்ளியது. அங்கிருக்கும் எத்தனையோ சிவராஜ்களில் ஒரு மூத்த சிவராஜ் பேசிக்கொண்டிருந்தார்.

"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்.

என்னிடம் தினமும் இது போல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வருகிறார்கள். அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். என் பேரக்குழந்தைகள் இப்படிச் சீரழிவதை என்னால் தாங்க முடியவில்லை. உங்களுக்கும் கைப்பழக்கம் இருந்தால், நீங்கள் என்னிடம் வாருங்கள். நான் உங்கள் தாத்தா மாதிரி. உங்கள் வீட்டுக்குத் தெரியாமல் நான் உங்களைக் குணப்படுத்துகிறேன்.." அது இது என்று மிகவும் அக்கறையாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கண்ணீர் வேறு வடித்தார்.

நான் அரண்டு போய்விட்டேன். நான் மட்டுமல்ல. என் வயதையொத்த எந்தவொரு இளைஞன் பார்த்தாலும் பயந்துதான் போவான்.
இதில் மறைத்து வைக்க ஒன்றுமில்லை. வயது அப்படி! ஒரு ஆர்வத்தில், வளரும் தன்னுடலை ஆராய்தலின் ஈர்ப்பில், தனியாக இருக்கும் சில சந்தர்ப்பங்களில் சுயபுணர்ச்சியில் ஈடுபடுடத் தொடங்கியிருக்கும் ஒரு விவரந்தெரியாத விடலையிடம் இப்படிப்பட்ட தகவல்கள் தரப்பட்டால் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும்.

மிகவும் பயந்து போனால் அவன் என்ன செய்வான். அப்படி, இப்படி என்று எப்படியாவது காசைப் புரட்டிக் கொண்டு, கோவை லலிதா லாட்ஜில் மாதாமாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் ஆஜராகும் ஒரு சிவராஜைப் பார்க்கப் போவான். காசைக் கொடுத்து விட்டுக் காலில் விழுவான். "அவரும் நீ ஒண்ணும் பயந்துக்காத தம்பி நாங்க பாத்துக்கறோம்" என்று வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு லேகியத்தையும், சூரணத்தையும் கொடுத்துவிட்டு "வர்ட்ட்டா.." என்று போய்விடுவார்.

நமக்கு அந்த அளவுக்கெல்லாம் தைரியம் இல்லையென்றாலும், எனக்குக் குழந்தை பிறக்காது என்று உள்ளூர நம்பத் தொடங்கி விட்டேன். அவர் வேறு மறதி, பயம், சந்தேகம் போன்ற சகஜமாய் நிகழ்பவற்றையெல்லாம் கூட இந்த 'வியாதி'க்கான அறிகுறிகளாகச் சொல்லியிருந்ததால் பேனாவை மறந்து விட்டுப் பள்ளி சென்று விட்டால் கூட பயமாகவே இருந்தது. ஒரு மாதிரி என்னை நானே தேற்றிக் கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று இருந்தேன். பள்ளி, கல்லூரி எல்லாம் முடிந்தது.

இப்போதுதான்.. ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு செக்ஸாலஜிஸ்ட் ஒருவரிடம் உரையாடும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது (அப்போதும் தற்செயல்தான். நானாகப் போகவில்லை). அவரிடம் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன். சுய இன்பம் குழந்தைப் பேறைப் பாதிக்குமா என்று. சிறு புன்னகையுடன் அவர் சொன்னார்-

"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்?

If Masturbation is wrong, and of course Sex is also WRONG. அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்தல் மட்டும் அவசியம். அது வெறும் பழக்கம் மட்டுமே. வியாதி அல்ல.

நீ உன்னைக் குழப்பிக் கொள்ளாதே. அதிகபட்சம் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையென்ற இடைவெளியில், சீராக உன்னால் சுய இன்பத்தைக் கட்டுப்பாட்டுடன் செய்ய முடிகிறது என்றால், ஒரு சராசரியான செக்ஸ் வாழ்க்கை உனக்காகக் காத்திருக்கிறது. சந்தோஷமாக இரு!"

சுய இன்பத்தை அடுத்து நம் சிவராஜ் அவர்கள் கூறிய இன்னொரு முக்கியமான 'வியாதி' - சொப்பன ஸ்கலிதம்! அதாவது உறங்குகையில் விந்து வெளியாதல். திருவாளர் சிவராஜ் அவர்கள் இதையும் ஒரு மிகக் கொடிய நோயாக சித்தரித்தார். இதைப் பற்றியும் கேட்டேன். அவர் பதில் -

"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்த காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை."

'என்னடா இது.. தூங்கும்போது இப்படி ஆகுதே' என்று குழம்பிப் போயிருக்கும் இளைஞன் சிவராஜ் பேசுவதைக் கேட்டால் என்ன ஆகாமல் இருப்பான்?

இவையெல்லாவற்றையும் விட மருத்துவர் சொன்ன அடுத்த வாசகம்தான் மிக முக்கியமானது.

"ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் 2 ஆண்டுகளாகப் பணிபுரியும் உனக்கே இவையெல்லாம் தெரியாது எனும் போது, இந்நாட்டின் மற்ற இளைஞர்களை நினைத்து மிகுந்த அச்சப்படுகிறேன்."

இவ்வரிகள்தான் நம் சமூகம் எனக்கு மாட்டிவிட்ட முகமூடியைப் பிய்த்தெறிந்து விட்டு, இதை எழுதும் தைரியத்தைக் கொடுத்தன. இப்படியே படித்தவன், படிக்காதவன் என்று எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால், பின் நம் இளைஞர்களுக்கு உண்மையை யார்தான் சொல்லித் தருவது?

பாலியலை மூடி மூடி வைப்பதன் மூலம் நாம் இங்கே காப்பாற்றுவதற்கு எந்தக் கலாச்சாரம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செக்ஸ் என்ற சொல் வீடுகளுக்குள் புழங்கத் தகாதவொன்றாகவே இருக்கிறது. கெட்ட வார்த்தை! உடலியல் குறித்தான எந்த ஒரு விளக்கமும் குழந்தைகளுக்குப் பெற்றோரிடமிருந்து தரப்படுவதில்லை.

பண்பாடு, கலாச்சாரம் என்பதான மாயைகள் ஏற்படுத்தியிருக்கும் பொய் வலைக்குள் இவை சாதாரணமாக சாத்தியம். சரி. வீட்டில் தான் இந்நிலை. பள்ளியிலாவது தரமான பாலியல் கல்வி தரப்படுகிறதா எனில், நமக்குக் கிடைப்பதெல்லாம் ஒரு பெரிய 'இல்லை' மட்டுமே.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் கல்வியெல்லாம் சொல்லித்தர மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தரக்குறைவான செயல். அவமானம்! சிறார்கள் அவர்கள் உடலையும், உறுப்புகளையும் பேணுவதற்குக் கற்றுத் தருவதிலிருக்கும் ஆசிரிய தர்மம் புரியாதவர்கள். தத்தம் பிள்ளைகளுக்கே அவற்றை சொல்லித் தர எண்ணம் வராதவர்கள், ஊரான் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்றுவிப்பார்கள்?

அவ்வளவு ஏன்? நான் இங்கே இத்தனை நியாயம் பேசுகிறேனே.. எப்படி? என் வலைப்பக்கத்தை என் பெற்றோர்கள் படிப்பதில்லை என்ற தைரியந்தான். என் உடன் பிறந்தோர் இருக்கும் வகுப்புக்கு பாலியல் கல்வி தரச் சொன்னால் செல்வேனா. மாட்டேன்! நம்முடைய மூன்றாந்தர சமூகம் என்னை அப்படித்தானே வளர்த்து வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்காவது இந்தத் தேவையில்லாத தயக்கங்கள் இல்லாத வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பில் வளரும் இளைஞர்கள், பாலியல் மற்றும் உடலுறவு சம்மந்தப்பட்ட தவறான தகவல்களை வணிக நோக்கில் பரப்பும் காசாசை விஷமிகளிடம் எளிதாக சிக்கிவிடும் அபாயங்கள் மயிரிழை அளவேனும் குறையவும், எனக்குத் தெரிவதற்குத் தாமதமான நடைமுறை மற்றும் அறிவியல் பூர்வமான உண்மைகளை ஒரு சிலருக்கேனும் சரியான தருணத்தில் கொண்டு சேர்க்கவும் இது ஒரு சிறு முயற்சி.


தொடர்புடைய சுட்டிகள்:

http://www.ayurvediccure.com/over_masturbation.htm

http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide
http://www.afraidtoask.com/masturbate/MedView.htm
http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission20 மறுமொழிகள்:

sikkandar July 27, 2009 at 11:31 AM  

excellent and valuable article
congratulation

regard
sikkandar

பாலா July 27, 2009 at 1:05 PM  

mathan excellent
vera enna solla
arumainga

மதன் July 27, 2009 at 4:30 PM  

Thank You Sikkandar and Bala!

கவிதை காதலன் July 27, 2009 at 5:02 PM  

மிக நல்ல பதிவு.. ஒரு காலத்துல நானும் அந்த வைத்தியன் சொல்றதை எல்லாம் tv யில பார்த்து பயந்துகிட்டு இருந்தேன். நல்ல வேலை சில நல்ல புத்தகங்களோட துணையால (மதன், டாக்டர் ஷாலினி, போன்றவர்களோட புத்தகம்) அதுல இருந்து மீண்டு வந்தேன். இது போல உபயோகமா எழுதுங்க. வாழ்த்துக்கள்

மதன் July 27, 2009 at 6:40 PM  

பாராட்டுக்கு நன்றி..

The Rebel July 27, 2009 at 9:52 PM  

Very good post.
Hope many people are aware of these fake doctors.We must take legal action against these bastards.

கே.பாலமுருகன் July 27, 2009 at 11:24 PM  

vaNakkam mathan. நலமா? சமூக மத இறுக்கங்கள் எப்பொழுதும் பாலியல் விழிப்புணர்வை மூடி மூடி மறைத்து அதையொரு அறியாமையென ஆக்கிவிட்டது. துணிவுடன் பேசவேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஆரோக்கியமான படைப்பு வாழ்த்துகள்.

எங்கள் மலேசியாவில் "யோனி" என்று எழுதியதற்காக பல பட்டங்களை வவங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிரேன்.

http://bala-balamurugan.blogspot.com/2009/07/blog-post_9228.html

படித்துப் பபர்க்கவும். நண்பா

மதன் July 27, 2009 at 11:31 PM  

அந்தக் கட்டுரையும், அது தொடர்ந்த எதிர் வினைகளையும் படித்ததால்தான் உங்களுக்கு மின்னஞ்சலிட்டேன். கருத்துக்கும், அன்புக்கும் நன்றி!

யாத்ரா July 28, 2009 at 1:10 AM  

நல்ல, அவசியமான பதிவு மதன்.

அருண்மொழிவர்மன் July 28, 2009 at 2:54 AM  

நிச்ச்யமாக தேவையான் பதிவு.

இவர்கள் இப்படி பொய் சொல்லி காசு உழைப்பது மட்டுமல்லாமல் சும்ம இருக்கின்ற இளைஞர்களுக்கு தேவையில்லாத தாழ்வு மனப்பாங்கு சிக்கலை வேறு வரப்பண்ணிவிடுகின்றார்கள். போலி வைத்தியர்கள் என்கிற அடிப்படையில் இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கமுடியாதா என்று நான் யோசிப்பதுண்டு

மதன் July 28, 2009 at 1:43 PM  

நன்றி யாத்ரா..

நன்றி Rebel..

ஆம் அருண்மொழிவர்மன்.. சித்த மருத்துவம் என்ற பேரில் இவர்கள் நடத்தும் கொடுமைகளை யாரேனும் கேட்கத்தான் வேண்டும்..

yalibaba July 28, 2009 at 3:23 PM  

very very good article.ippo tv potta ivanungathan vanthu thollai panranunga but ellam mudinchu evanunga veetla enna pannuvan ethellam seiya venanmnu sonnano athai correct aa pannuvan.thank you

Thennavan July 31, 2009 at 10:05 AM  

good come out keep posting the facts

mphasis August 3, 2009 at 8:42 PM  

thevayana varikal... super mathan...

கிறுக்கன் August 6, 2009 at 12:33 AM  

சூப்பர் மிக அருமை....

Joe August 10, 2009 at 9:00 AM  

நல்ல கருத்துள்ள இடுகை.

kumar August 12, 2009 at 12:29 PM  

நானும் இந்த நிகழ்ச்சிய பார்த்திருக்கேன், ஏழு தலைமுறையா வைத்தியம் பார்க்கிற இவனுங்களோட வைத்தியம் என்ன லட்சணத்தில் இருக்கும்னு பார்த்துக்கோங்க‌

sridhar August 16, 2009 at 12:17 PM  

great madan ur article is a candle light to the darker side of the society write more articles let ur candle light become a huge fire to erase the dark best wishes

kannan August 15, 2010 at 5:19 PM  

good..... thathanu solran. kasa pudungurathulaye kuriya irukan pudungi......... frds yarum vijay tv parthu emanthurathinga.... mathan mathiri thunichal and thairiyam. irukanum........

  ©Template by Dicas Blogger.

TOPO