ஸ்கிப்பிங் கயிறு
பின்னாடி இருந்தது.
இரு கைகளாலும்
இழுத்து முன்னாடி போட்டாள்.
தாண்டினாள்.
பின்னாடி இருந்தது.
இரு கைகளாலும்
இழுத்து முன்னாடி போட்டாள்.
தாண்டினாள்.
அக்காளின் வயதிலிருந்து
குழந்தையின் ஆசைக்கு
ஸ்கிப்பாகி, ஸ்கிப்பாகி
விழுந்து கொண்டிருந்தது
ஸ்கிப்பிங் கயிறு.
7 மறுமொழிகள்:
ச்சே! சூப்பர் மதன். :)
மிக்க நன்றி முத்துவேல்..
அடடா நல்லாருக்கே!
நன்றிங்க அருணா..
அருமை மதன்.
உங்கள் கவிதைகள் அருமை வாழ்த்துகள்
நன்றிங்க யாத்ரா.. நன்றி சந்ரு..
Post a Comment