Friday, July 24, 2009

என் பங்குக் காதல் கவிதைகள்..


அடுத்த முறையேனும்
காதலில் வெற்றி பெற
ஆசைப்படுகிறேன்
உன்னுடனேயே.

இன்னொரு முறையெனினும்
காதலில் ஆசையோடு
தோற்றுக் கொள்கிறேன்
உன்னுடனேயே.


-oOo-


ஒரு அவன்.
ஒரு அவள்.
ஒரு காதல் வந்தது.
ஒரு உலகம் காணாமல் போனது.


-oOo-


நம்முடையவர்களும்,
நம்முடையதுகளும்
எல்லாவித
சமரசங்களுக்கும்
ஆட்படுத்தப்படுகிறார்கள்
நம்முடையதுக்காக


-oOo-


என் பெயரைக்
கூவினேன்.
உன் பெயராய்
எதிரொலித்தது.
மாற்றின் சாத்தியமும்
பலித்தது.
யாரோ சொன்னார்கள்
எதிர் மலையில்தான்
தற்கொலை முனை
உள்ளதென்று.


-oOo-


'காத்திருத்தல்' என்ற
வார்த்தைக்குள்
'காதல்' என்ற
வார்த்தை.

ஒருவரையொருவர்
காத்து இருத்தலும்,
ஒருவருக்காக ஒருவர்
காத்திருத்தலும்
நிகழாத போது
'திருத்த' என்கிறது
வாழ்க்கை.



6 மறுமொழிகள்:

மதன் July 24, 2009 at 1:41 PM  

நன்றிங்க கலையரசன்..

நேசமித்ரன் July 24, 2009 at 3:44 PM  

நல்லா இருக்குங்க
பிடிச்சிருக்கு

மதன் July 24, 2009 at 3:54 PM  

உங்கள் வருகை மகிழ்வைத் தருகிறது நேசமித்ரன்..

MSK / Saravana July 24, 2009 at 11:14 PM  

தலைப்பே கலக்கல். கடைசி கவிதை கலக்கல்..

மதன் July 24, 2009 at 11:20 PM  

நன்றிங்க..

  ©Template by Dicas Blogger.

TOPO