Tuesday, July 21, 2009

சூட்சுமப் பூட்டுகள்



நான் உள்ளே இருந்தேன்.

கதவைப் பூட்டும்
சப்தம் கேட்டது.

உள்ளிருந்து பூட்டினாயா
வெளியிலிருந்து பூட்டினாயா
என்றேன்.

பதில் வரவில்லை.

வெளியிலிருந்து
பூட்டியிருந்தால்தான்
பதில் வராது
என்ற பதில்
வராத பதிலிலிருந்து
வந்தது.

உள்ளேயிருந்தும்
பூட்டியிருக்கலாமோ?

ஆனாலும்
பதிலில்லையே.

தெரியவில்லை.



4 மறுமொழிகள்:

ஆ.சுதா July 22, 2009 at 9:28 PM  

எனக்கு புரியவில்லை!

மதன் July 22, 2009 at 11:40 PM  

பிரிவின் நிகழ்வு.. அதைத் தடுக்கும் முயற்சி.. அதில் வெற்றி அல்லது தோல்வி..

இதைத் தான் சொல்ல முற்பட்டேன். ஆனால் எந்த அளவுக்கு சொல்ல வந்ததை சரியாக சொன்னேன் என்று தெரியாது.

கவிதை ஆர்வலர்கள் பொதுவாக ஒரு கவிதையை, எழுதியவன் விளக்குவதை விரும்புவதில்லை. அது வாசகனின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு ஒத்தது என்கிறார்கள்.

எனவேதான் குறிப்புகளோடு நிறுத்திக் கொண்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.

வருகைக்கு நன்றி!

MSK / Saravana July 24, 2009 at 11:14 PM  

நல்லா இருக்குங்க மதன்..

மதன் July 24, 2009 at 11:16 PM  

வாங்க சரவணக்குமார்.. முதல் வருகையானு எனக்குத் தெரியாது.. ஆனா இது உங்களோட முதல் comment. நன்றி! :)

  ©Template by Dicas Blogger.

TOPO