இந்த நாள் இனிய நாள்..
தேமேயென்று புல்லை நக்கிக் கொண்டிருந்த
மேஷத்தின் புட்டத்தில் கொம்பைத்
தேய்த்தது பின்னாலிருந்த ரிஷபம்.
கீழே விழுந்த சில காய்ந்த புழுக்கைகளை
அள்ள வந்த இரு மிதுனப்பெண்களில்
ஒருத்தியின் காலைக் கொட்டியது
கொடுக்கு விறைத்த கடகமொன்று.
பிடரியுதறிக் கிளம்பிய சிம்மத்திற்கு
கன்னியின் முலையில்
பாலருந்தும் பசியிருக்கையில்
ஒய்யாரித்து வந்த கன்னி ஏந்தியிருந்த
அலங்காரத் துலாமின் ஒரு தட்டினடியில்
பின்னால் வால்நீண்டெழுந்த
பொன்மஞ்சள் விருச்சிகம் ஒட்டியிருந்ததால்
குறியெய்ய வேண்டியது
சிம்மத்திற்கா, விருச்சிகத்திற்கா என்று
தனுசு குழம்பியது.
மேஷத்திற்காகப் பழிவாங்க
ரிஷபத்தின் உறுப்பில் தேய்க்க
தனக்கும் கொம்பிருக்கிறதென்று
மகரம் வீறு கொள்ள,
கும்பத்தினுள் சுவரொட்டி நீந்திக் கொண்டிருந்த
மீனம் ஒரு குதி போட்டு
இன்று யார்யாருக்கென்ன பலனென்று கேட்டதில்
போட்டது போட்டபடி போட்டுவிட்டு
போய் நின்றனவாம் எல்லாமும்
தினசரி கேலண்டரின் முன்.
10 மறுமொழிகள்:
ஆ அருமையான கவிதை மதன், அருமையாக பகடி செய்திருக்கிறீர்கள்.
தங்களுக்குப் பிடித்தவாறு எழுத முடிந்தது மகிழ்வைத் தருகிறது யாத்ரா..! :)
அற்புதம் மதன்.
வாங்க வேலன்.. பாராட்டுக்கு நன்றி.. உங்கள் வருகை மிக்க மகிழ்வைத் தருகிறது..! :)
ரசித்துச் சிரித்துக்கொண்டே படித்தேன். EXCELLENT. உங்க வயச நினைச்சு யோசிச்சா இந்தக் கவிதை ஆச்சரியமான இன்ப அதிர்ச்சி.
பாராட்றிங்கனு நம்பறேன் முத்துவேல்.. திட்றா மாதிரியும் இருக்குங்க..! :)
அற்புதமான ரசனைக்குள் அடைபடும் கவிதை.. படிச்சுட்டு வேற எதைப்பத்தியும் யோசிக்க முடியாம செஞ்சுட்டீங்க..
வாழ்த்துக்கள் மதன்!
நன்றிகள் சென்ஷி..!
நானும் ரசித்துச் சிரித்துக்கொண்டே படித்தேன்.
அருமை
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
நன்றிகள் பிரவின்ஸ்கா..
Post a Comment