தமிழ் வலையுலகும், அக்கா முலையும்!
எழுத்துலகில் யான் ஆற்றி வரும் அரும்பணிகளுக்கு(?!) இடையில், என் கெரியரின் மிக முக்கியமானதொரு ஆய்வறிக்கையை எழுதப் புகுகிறேன்! அவ்வப்போதைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் இன்னபிற என்று எழுதியவற்றை இங்கு இட்டு வைத்து விட்டு, வருபவர்களையும், வாசிப்பவர்களையும் கொஞ்சம் அவதானித்ததில், புலனான ஒரு அதிர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இந்த இடுகை.
அவையாவன: இங்கே வலப்புறத்தில் பார்த்தீர்களானால், சில Gadgets இருக்கும். அவைகளில் ‘வந்த திசைகள்’ என்றிருக்கும் Gadget-டானது உலகின் எந்தப் பகுதியிலிருந்து, எப்போது வாசக அன்பர்கள் வருகை தந்தார்கள் என்று காட்டும்.
‘வர வைத்த விசைகள்’ என்ற Gadget-டானது, வருகையாளர் வேறேதேனும் வலைப்பக்கத்திலிருந்து இணைப்பு கிடைத்து வந்திருந்தால் எந்தத் தளத்திலிருந்து வந்தார்கள் என்பதை, Bangalore Arrived from tamilish.com அல்லது Madras arrived from jyovramsundar.blogspot.com என்று காட்டும். இது முதல் வகை.
அல்லாமல், வருகை தருபவர்கள் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கூகிளிலோ அல்லது வேறேதேனும் தேடுபொறியிலோ தேடி, அந்த வார்த்தை நம் தளத்திலிருப்பதன் மூலம் இணைப்புக் கிடைத்து வந்திருந்தால், California Arrived from google.co.xx என்று காட்டும். இது இரண்டாம் வகை.
என் எழுத்தையும் மதித்து நண்பர்கள் யாத்ரா, வேலன் அண்ணாச்சி, MSK ஆகியோர் இந்தத் தளத்திற்கு அவர்கள் வலைப்பூவிலிருந்து இணைப்புக் கொடுத்திருந்ததைக் கூட நான் அறிந்து கொண்டது இந்த Gadget மூலமாகத்தான்.
சில தமிழ் சினிமா குணச்சித்திரங்கள் சொல்வதைப் போல் 'இப்ப விஷயம் என்னான்ன்னா..' என்று இழுக்காமல் நான் சொல்ல வருவது.. இந்த ‘வர வைத்த விசைகள்’ என்ற Gadgetல் நேற்று, Madras Arrived from google.co.in என்றொரு உள்ளீடு இருந்தது (ஊர் பெயர் மாற்றப்பட்டுள்ளது). நானும் வழக்கம்போல் Right Click -> Open in New Window-வைக் கிளிக்கி விட்டேன்.
அடுத்த விநாடி, சேலம் சிவராஜ் சித்த மருத்துவர் சொல்வது போல் (அடடா.. விஷயத்திற்கேற்ற உதாரணம்!), உச்சி முதல் உள்ளங்கால் வரையான அத்துணை நாடி நரம்புகளும் அதிர்ந்தடங்கின. காரணம் - அந்த வாசக சிகாமணி தேடியிருந்தது 'அக்கா முலை' என்ற வார்த்தையை!
இந்தப் பேரிலக்கிய வாசகப் பெருந்தகை தேடிய 'அந்த' வார்த்தை, என்னுடைய 'எல்லோரும் மறந்துவிட்டிருப்பது' என்ற கவிதையில் தற்செயலாய் இடம் பெற்றிருந்ததாலேயே அந்தப் புனிதரின் விரல் முனைச் சுவடுகள் நம் தளத்திற்குக் கிடைக்கப் பெற்றன என்பது பிற்பாடு புரிந்து புளகாங்கிதம் அடைந்தேன்.
அதிர்ச்சி அடங்க சில நிமிடங்கள் பிடித்த பின், மிக நீண்ட நாட்களுக்குப் பின் வயிறு வலிக்க சிரித்தேன். சிரித்து முடித்த பின், இப்படியும் மனிதர்களா என்ற ஆச்சர்யம் கொண்டேன். இதற்கு முன்பு ஓரிரு முறை வெறுமனே 'முலை' என்று தேடி, அதன் மூலம் வருகை புரிந்தவர்களைக் கண்டுள்ளேன். அப்போது கூட ஒன்றும் பெரிதாய் படவில்லை. சரி.. எதைப் பிடிப்பது.. Sorry.. படிப்பதென்பது அவரவர் விருப்பம், சுதந்திரம் என்று லூசாக விட்டுவிட்டேன்! ஆனால், இம்முறை 'அக்காவினுடையதையே' தேடி என்னை எதிர்வினையாற்றாமல் இருக்க விடவில்லை நம் இலக்கியார்விகள்.
ஆனாலும், அடுத்த முறை இதுபோல காமத்தேனைத் தேடிப் பருக வரும் வாலிப வயோதிக வண்டுகள், சப்பையான நமது தளத்தைக் கண்டு அதிருப்தியடையாமலிருக்க, அவர்களுக்கு http://storyintamil.blogspot.com என்றவொரு அஜால் குஜால் தளத்தை, காம சூத்திரக் களஞ்சியத்தை, வாத்ஸ்யாயனாருக்கே கற்பனை சொல்லிக் கொடுக்கும் ஒரு இன்பப்பீடியாவைப் பரிந்துரை செய்வதில் தன்யனாகிறேன்.
என்னளவில் எழுந்த அதிர்ச்சியை, ஆச்சர்யத்தை, ஆதங்கத்தைப் பதிவு செய்ய எண்ணியதன் விளைவே இக்கட்டுரை. படித்த கையுடன், 'உங்க அக்காவுக்கெல்லாம் அது இல்லையா.. இது இல்லையா?' என்றெல்லாம் கேட்க வேண்டாமென்று அனானித் திலகங்களைத் தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்!
14 மறுமொழிகள்:
நல்ல காமெடி.
நீங்க சொன்னா சரிங் முத்து! :)
மீண்டும் காமெடி. நான் இங்க சிரிச்சுக்கிட்டிருக்கேன்.
சிரிங்க.. நல்லா சிரிங்க.. ஆனா இத எழுத முன்னாடி நான் அழுதேன்ங்க..!
//வாழ்க தமிழிலக்கியம்! வளர்க அக்காமுலைகள்! //
எனக்கு அக்கா இல்லை என்றாலும்.. மேலே உள்ள இந்த வார்த்தை என்னை கூச்சப்பட வைத்தது!
யாரோ ஒருவன் தேடினான் என்பதற்க்காக, படிக்க வரும் என் போன்ற உங்களின் வாசிப்பாளர்களை
முகம் சுழிக்க வைக்கவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து!!
அதை எடுத்தாலும் சந்தோஷம்.. இல்லை என்றாலும் சந்தோஷம்...
அதை நீக்கிவிட்டேன் கலை.. நன்றி!
ஹா ஹா ஹா!
சில சமயங்களில் எனக்கு கூட வரும்!
செம செர்ச்! வலை தந்து உதவியதற்கு நன்றி!
வாங்க வால்பையன்.. (மொதல் தடவையா உங்களக் கூப்டறதால சங்கோஜமா இருக்குங்க)
ரொம்ப நாளா உங்களப் படிக்கறேன். நீங்க இந்தப் பக்கம் வந்ததுல ரொம்ப சந்தோஷம்!
தவறா எடுத்துக்காதிங்க மதன்!
எனக்கு பாலோயராக இருக்கும் அனைவருக்கும் நான் பாலோயர்!
தினம் 280 ப்ளாக் படிக்கிறேன்.
200 பின்னுட்டமாவது போடனும், அதனால் தான் மற்ற நண்பர்களை கவனிக்க முடிவதில்லை!
நேரம் இருக்கும் போதெல்லாம் எனது இருத்தலை பதிவு செய்கிறேன்!
தவறாக எல்லாம் எடுத்துக்கலங்க.. உங்கள ரொம்ப நாளா தெரியும்.. நீங்க வந்ததுல சந்தோஷம்னுதான் சொல்ல வந்தேன்!
சிரிப்போ சிரிப்பு :))))
நானும் விரைவில் அந்த GADGETஐ என் ப்ளாக்கில் add செய்து விடுகிறேன்.
நான் பிரபல எழுத்தாளரின் வலைபக்கத்தில் உள்ள உங்கள் கமென்ட் மூலமாக இங்கு வந்தேன். ;-)
பாராட்டுக்கு நன்றி கார்த்திகேயன்..
இது மாதிரியான ஒரு தேடலில் என்னோட ஒரு போஸ்ட் தேடப்பட்டதில் ஆசையாய் வைத்த தலைப்பையே மாற்றிவிட்டேன் பாஸ்.. இவிங்கள என்ன செய்யலாம்?
ஒண்ணுமே செய்ய முடியாதுங்க.. இப்படிப் பதிவெழுதி கொஞ்சம் ஆத்திக்கலாம். அவ்வளவுதான்!
Post a Comment