சில கவிதைகள்..
ஒட்டாமல் கேட்டல்
கிடைக்காமல் லைனில் கிடைத்த
யூஸரிடம் சற்று தள்ளி
தொலைபேசிக் கொண்டிருக்கிறான்
சக அலுவலன்
விடாமல்
வைப்ரேட்டிக் கொண்டிருக்கும்
அவனது அலைபேசி யதிர்வில்
கேட்டன
நடுவழியலையில் பொறிந்துதிர்ந்த
ஏதோ
யாரோ
வார்த்தைகளின்
சாம்பல் சத்தங்கள்
-0-
இடம் பொருள் கேவல்
எப்படியோ கையில் கிடைத்துவிட்ட
பிளேடைக் கீழே வைத்துக்
கிர்ர்றீச்சி விட்டாள்
குழந்தை
பல் கூசிவிட்டதாம்
பில்லிங் கவுண்ட்டரில்
எல்லோர் முன்பும்
அசிங்கமாகத் திட்டினார்
வளர்ந்தவர்
நா கூசவில்லையாம்
-0-
நீள் மௌனம்
நான் இங்கே தனியாக இருந்தேன்
அவள் அங்கே தனியாக இருந்தாள்
எங்கள் தனிமைகள்
புணர்ந்து கொண்டிருந்தன
நன்றி: பனிமுலை
5 மறுமொழிகள்:
ரொம்ப,ரொம்ப பிடிச்சிருக்கு மதன்.
உறங்கி விழித்த வார்த்தைகள்,புத்தக வாசனையுடன்,புரட்டி அடித்த தொகுப்பு.
நேசனுக்கு கூட,ஒரு கவிதை வாசித்து காட்டினேன்-அழை பேசியில்.
ஐ லவ் யூ மதன்.
இது குறித்து பேச ஆசை,என் தளத்தில்.நேரம் வாய்க்கட்டும். :-)
கனத்து வழிந்து கொண்டிருந்த ஆயாசத்துடன் உறங்கச் செல்லும் முன் உங்கள் வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன.
ஏனோ அவ்வப்போது எழுத்தூக்கம் சூம்பிப் போய், அயற்சியில் மூழ்கி, சலிப்புற்ற மனதுடன் சண்டை போடத் திராணியே வேண்டாம் என்று என்னை நானே கைவிடுவது நிகழ்ந்து விடுவதைப் பற்றி நண்பர் நேசமித்ரனுடன் கூட பேசிக் கொண்டிருந்தேன்.
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி. நெகிழ்வாய் உணர்கிறேன்.
கவி மொழியின் படி நிலைகளில் குழந்தையின் ஒன்றுவிட்ட படிகளின் தாவல்
கடக்கும் துரிதம் ககனத்தீயில் தடம் தடம் இறக்கலாம்
வாழ்த்துகள் மதன்
கவிதைகள் அனைத்தும் அருமை மதன்.
வாழ்த்துகள்,
கடைசிக் கவிதை கலக்கலா இருக்குதுங்க!
Post a Comment