Thursday, April 8, 2010

நினைவின் மணலில்


















மறுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை விட
திருப்பித் தரப்பட்ட பரிசுப் பொருட்கள்
கனம் மிகுந்து காண்கின்றன

துணிகளுக்கடியில்...
ஷோகேஸில்...
புத்தகங்களுக்கிடையில்...
எங்கு ஒளித்து வைப்பினும்
அவ்வப்போதைய கண்படுதல்கள்
தவிர்க்கக் கூடியவையாயில்லை

பேனா, கைக்குட்டை, கீ செயின்
போன்றவை பரிசளிக்க ராசியில்லாதவையாம்
திரும்பி வந்த பட்டியலில்
அப்புறப்படுத்த சிரமமில்லாதவையும் கூட

எஞ்சியவற்றை
சிக்னல் பிச்சைகளின்
குளிருக்குக் கொடுத்துவிடலாம்

நினைவின் மணலில் மீதமிருக்கும்
சில தேதிகளும்
வாழ்த்து அட்டைக் குறிப்புகளும்
காலக்காற்றிலழியும் வரை....?

நன்றி: பனிமுலை



2 மறுமொழிகள்:

செந்தில்குமார் April 8, 2010 at 9:17 PM  

வணக்கம்

கோபத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிரேன்

மதன் April 8, 2010 at 9:35 PM  

@செந்தில்குமார்-

கவிதையின் ஊற்றுப் புள்ளியை அறிந்து கொள்ளும் முயற்சியும் கூட கவிதானுபவத்தின் சுவாரசியத்துக்கு சுவை சேர்ப்பதுதான். உங்களளவில் கோபம் என்று எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவலுக்கும், வருகைக்கும் நன்றி.

@நேஸ்-

கவிதை எழுதப்பட்டிருக்கும் விதத்திலேயே உங்கள் கருத்தையும் வெளிப்படுத்துகிறீர்களா? என் அவதானிப்புக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

அதிகம் சுற்றி வளைக்காத கருத்துக்கு நன்றி. :)

மதன்

  ©Template by Dicas Blogger.

TOPO