பொய்க்கால் கவிதை
சற்று வலுவாகத் தட்டினால்
உடைந்துவிடும்படி சொல்லிவிட்ட
ஒரு பொய்யை
ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
இறுதியில் கவிதைக்குள்
இட்டு வைத்தேன்.
பின்னந்தக்
கவிதையை ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
கிடைக்காமல்,
இறுதியில்
நான் பொய்யே சொல்லவில்லையே
என்று கவிதையிடம்
சொல்லிவிட்டேன்.
6 மறுமொழிகள்:
அழகு..கவிதையும்..அப்புறம் பொய்யும்
நான் சொல்லவேண்டியதை தண்டோரா சொல்லிவிட்டர்ர். நேற்றுதான் இவரைப்பற்றி சொன்னேன்.. எப்படி பிடிச்சிங்க லிங்க? ஜி
¦À¡ö ¦º¡É¡ø «Ð ¸Å¢¨¾ìÌ ¦¾¡¢óÐùÎõ
நல்ல கவிதை,மதன்!
hmmm :)
மிக்க நன்றி தண்டோரா.. Celeberities எல்லாம் இந்தப் பக்கம் வந்துருக்கீங்க! :)
அஷோக் - இப்படியே எல்லார் கிட்டயும் சொல்லாதிங்க.. யாராவது உங்கள அடிக்க வரப் போறாங்க..!
தென்றல் - என்னவோ சொல்ல வரீங்க.. ஆனா என்னனுதான் புரியல..!
நன்றிங்க பா.ரா. உங்கள் வருகை மகிழ்வைத் தருகிறது.
நந்தா - ம்ஹும்ம்.. :)
Post a Comment