Wednesday, November 25, 2009

கைசுடும் பிளம்புகளுக்குக் காலநீர் சுரப்புகள்




1. உன் கிறீச்சிடல்களுடன்
நகர மறுத்த என் கால்கள்
அடர் வனமொன்றின் கூதல் மாலை
இருளினுள் ஒளிந்துகொள்ள முற்பட்டும்,

பொதுவாய் சொல்லப்படும்
உதாரணங்களையும் என்மேல் வீசாது
தனியான என் திமிருக்கும்
மதிப்பளிக்கும் உன் வெயில் நேரங்களும்,

பனிப்புலமொன்றின் காலையில் தேநீரின்
வெதுவெதுப்போடு
ஒன்றின் இருண்மை இன்னொன்றில்
நீங்க
நமக்காக.


-oOo-


2. சற்று முன்னர் மாறிவிட்டிருக்கும்
என் சுற்றத்தினுள்
சிரமப்பட்டு நுழைகிறேன்.
கிஞ்சித்தும் யோசிக்காமல்
கலைத்துப் போடுகிறது
காலம் திரும்பவும்.
சமச்சீர் பொதித்த
தினசரியின் போக்கு மாற்றி
பாலையில் தொலைந்த
மணற்துகளாக்கி எனைத்
தனித்து விடுகிறது.
பஞ்சுப்பொதி சேர்த்து வைத்து
உள்ளடங்குகையில்
கூடு முட்காடாகிறது.
எனில் அனைத்தும் அனைவரும்
திரும்பத், திரும்ப
அவ்வாறே இருப்பது
திரும்பத், திரும்ப
அவ்வாறில்லாமல் ஆவதற்கான
காத்திருப்புதானோ.
நீள்கிறது சுழற்சி.


-oOo-

11/02/2009 அன்று எழுதியது.



7 மறுமொழிகள்:

Ashok D November 25, 2009 at 5:13 PM  

இரண்டாவது சிக்ஸர்

மதன் November 25, 2009 at 8:36 PM  

நன்றி அஷோக். எதை எழுதினாலும் வந்து, ஒரு கருத்த சொல்றிங்க. நன்றி!

யாத்ரா November 25, 2009 at 10:23 PM  

ரொம்ப நல்லா இருக்கு மதன்.

மதன் November 26, 2009 at 8:25 AM  

நன்றி யாத்ரா!

Ashok D November 26, 2009 at 5:14 PM  

இரண்டாவது கவிதை எனக்கு மிக நெருக்கமாகவும் நல்ல கவிதையாகவும் மலர்ந்துயிருந்தது.

கவிதை என்பது ஒரு அலைவரிசை. அது ஒத்து போகும்போது ... பின்னூட்டங்கள் தானே வரும் :)

யாத்ராவினை சென்று படித்துபாருங்கள் தானே புரியும்.

மதன் November 30, 2009 at 11:00 AM  

யாத்ரா ஒரு அனுபவம் அஷோக். அதில் உங்களைப் போலவே நானும் திளைப்பதில் சுகிக்கிறேன்.

நட்பு வட்டத்தில் ஆளுமைகள் இயல்பாக வாய்க்கப் பெற்றால், அது கொண்டாட்டத்திற்குரியது. நான் எனக்குள்ளாகவே கொண்டாடிக் கொள்கிறேன் அதைக் கவிதைகளுடன்!

தங்களுக்கு நெருக்கமாக எழுத இயன்றது மகிழ்வைத் தருகிறது.

விஜய் December 4, 2009 at 10:44 PM  

முதன் முறையாக வருகிறேன்

கரம் பிடித்து பாராட்ட வேண்டும் என்று ஆசை

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

விஜய்

  ©Template by Dicas Blogger.

TOPO