நம் வெற்றிகளுடன் நாம்
உதடுகளின் பரிபாஷைகள் மௌனத்தின்
மொழியைச் சிறையிட்டு
பரீட்சார்த்தங்களோடு நிகழ்த்தும் போருக்குக்
குருதி துடைக்க நாவு நீட்டுகின்றன.
அகமகிழ்தலின் எல்லைக்கோட்டில்
உனக்கான மலர்ச்செண்டுகளுடன்
உன் வெற்றிக்காக இல்லாவிடினும்,
எரியும் காழ்ப்பின் புகைவாசம் மறைக்க
நான் நிற்கிறேன்.
தற்போதைய என் காலடித்தடம்
உன்னால் அடையாளங் காணப்படலாம்
ஆர்த்தெழும் வன்மம் மறைத்து
கையில் செண்டுடன் பிறிதொரு நாள்
நீ என் வெற்றிக்குப் பின்
இதே போன்றதொரு இடத்தில் நின்றிருக்கையில்.
அப்போது என் வெற்றியை விட உன்
புகைவாசம் குறித்து கவனமாயிருப்பேன் நான்.
இக்கவிதையை பிரசுரித்த கீற்று குழுவினருக்கு நன்றி.
4 மறுமொழிகள்:
a well composed poem.. Truly interesting..!
Thank You!
அருமை
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
நன்றி பிரவின்ஸ்கா..
Post a Comment