புனையியற் பெயர்கள்
தமிழ்மதி
தமிழலை மற்றும்
தமிழ்னன்
என்று மொழியைக் குறித்தும்
அந்திமஞ்சள்
நிலவாளி மற்றும்
அருகம்புல்லன்
என்று இயற்கை துதித்தும்
சின்னபாரதியிலிருந்து
மதன்ஹாசன் வரை
சுயவிருப்பங்களைச் சுட்டியும்
ம(னி)தன்
எழுத்தாழன்
என்று மேதைமை காட்ட
விழைந்தும்
வசந்தி
மைதிலி போன்ற
ப்ரிய உறவுகளும்
இழுத்துப் பிடித்து யோசித்த
இவைபோன்ற இன்னபிற
வகையறாக்களும்
விடுத்து
எனக்கென்று வாய்த்ததையே
எனக்காகக் கொண்டதும்
நலமாகத்தான் படுகிறது.
4 மறுமொழிகள்:
எனக்கு இதுதான் பெயர் மதன்..!
நல்லது தமிழன்-கறுப்பி... :)
நல்லா வந்திருக்கு மதன்!
நன்றி சுந்தர்..! :)
Post a Comment