பிரிதலின் வன்பிடியுள்
எதிர்பாராது சந்திக்க நேர்ந்த
துர்கணம் ஒன்றின் சாத்தியப்பாடுகளில்
சாலையோரத்தில் சிதறிக்கிடக்கும்
சில்லுகளாய் நம் நேசம்.
போவோர் வருவோரின்
பச்சாதாபப் பார்வைகளின்
ஈரமும் நொதித்துப் போய்விட்டது
நீ கழட்டி வைத்துச் சென்ற காதலில்.
மீமீச்சிறு துகளொன்றின் பெருவெடிப்பில்
வெளி நிரம்பத் ததும்பிய நான்
என்னுள்ளேயே வந்து நிறைகிறேன்
காலத்தின் எல்லாத் துகள்களிலும்
புழுதியாய் மண்டிய உன் நினைவுகளுடன்.
உயிரோசை 16/02/2009 மின்னிதழில் பிரசுரமானது.
7 மறுமொழிகள்:
\\
காலத்தின் எல்லாத் துகள்களிலும்
புழுதியாய் மண்டிய உன் நினைவுகளுடன்.
\\
ம்ம்ம்...
மொழி உங்கள் வசம் மதன். உயிரோசைக்கு வாழ்த்துகள்.
அனுஜன்யா
@தமிழன்-கறுப்பி...
ம்ம்ம்...?? புரியலையே.. என்ன சொல்ல வரீங்கனு..!
@அனுஜன்யா,
ரொம்ப பாராட்றீங்கனு தோணுது..
உயிரோசைல உங்க கொல்லன் படித்தேன்.. வாய்ப்பே இல்லைங்க.. எனக்கு ரொம்ப பிரிச்சுது.. உயிரோசைக்காக உங்களுக்கும் வாழ்த்துகள்..! :)
மதன்.. கவிதை அருமையாக இருக்கிறது.
பிரிவுக் கவிதைகள் பல படித்திருந்தாலும் இந்த லாவகம் வேறெதிலும் கண்டதில்லை. அத்தனை நேர்த்தியாக இருக்கிறது.
சந்தடி கேப்ப்பில் பெருவெடிப்பையும் நுழைத்துவிட்டீர்கள்...
சபாஷ்!!!
நன்றி ஆதவா..!
உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_4092.html
மிக்க நன்றி ஜோதிபாரதி..!
Post a Comment