Saturday, February 14, 2009

படித்ததில் ரசித்தது

ஒரு புகைவண்டிப் பயணத்தில், ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர், அவனுடைய ப்ராஜக்ட் மேனேஜர், ஒரு பாட்டி மற்றும் அப்பாட்டியின் பேத்தி எல்லோரும் சென்று கொண்டிருந்தார்களாம். பயணத்தில், ரயிலானது ஒரு மலையைக் குடைந்த அடிவழிப் பாதையில் சென்றதாம். கும்மிருட்டில் திடீரென்று ஒரு முத்தச் சத்தமும், அதனைத் தொடர்ந்த ஒரு ”பளாரு”ம் கேட்டனவாம்.

பாட்டி நினைத்தாளாம். ‘இந்தப் பையன் நல்லவன மாதிரி இருந்துப்ட்டு பேத்திக்கு அசந்தா நேரமாப் பாத்து முத்தம் குடுத்துட்டானே. ஆனா பரவால்லப்பா. நம்ம பேத்தி நல்ல பொண்ணா இருந்தத்னால உடனே அவன அறஞ்சுப்ட்டா. நல்லா வேணும் இந்தப் புள்ளயாண்டானுக்கு..!’.

பேத்தி நினைத்தாளாம். ‘ஸ்மார்ட்டா இருக்கான் பையன். நல்லா ஒரு முத்தம் வேற குடுத்தான். ப்ச்ச்.. இந்தப் பாட்டி அதுக்காக அவன அறைஞ்சிருக்கக் கூடாதுப்பா..!’.

ப்ராஜக்ட் மேனேஜர் நினைத்தாராம். ‘இவன் கொடுத்த முத்தத்துக்கு இந்தப் பொண்ணு அவசரப்பட்டு என்ன அறைஞ்சுட்டாளே. இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேனோ..!’.

நமது சாஃப்ட்வேர் என்ஜினியர் நினைத்தானாம். ‘ஹைய்யோ.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒரே சமயத்துல, ஒரு அழகான பொண்ண கிஸ் பண்ணிட்டு, இந்தக் கடியன அறையவும் முடிஞ்சுதே..!’ என்று.

பொதுவாக ப்ராஜக்ட் மேனேஜர்களைத் தாழ்த்தி, சாஃப்ட்வேர் என்ஜினியர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையான Forwards மின்னஞ்சலில் நிறைய வருமென்றாலும், மேற்கண்டது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ஒருவர் முகத்துக்கு முன் கொட்ட முடியாத வெறுப்பு உள்ளே தேங்கித் தேங்கி நிறைகையில், ஏதேனும் ஒரு வகையில் அதற்கான வடிகாலை அதுவே தேடிக்கொள்ளத்தான் செய்கிறது.



7 மறுமொழிகள்:

மறத் தமிழன் February 14, 2009 at 7:43 AM  

ரொமப தமாசான கததேன்....

mvalarpirai February 14, 2009 at 8:44 AM  

பார்த்து தலை..உங்க மேனஜர், இதை படித்துட்டு..உங்க Appraisila கைவச்சிட போறரு!

மதன் February 14, 2009 at 4:10 PM  

நன்றி மறத்தமிழன்..!

தல.. உங்களப் போயி நல்லவன்னு நெனச்சேனே.. Weeken ல ஏன் தல அந்த ”நல்லவர” ஞாபகப்படுத்தறீங்க..?!

Anonymous,  August 4, 2009 at 7:45 PM  

Hi Madan,
enakku ithu paarthathil pidithathu..

http://www.youtube.com/watch?v=l60bW7lhRNc

Regadrs,
Anantha

மதன் August 4, 2009 at 8:13 PM  

நன்றி ஆனந்த்.. அவன் உள்ளங்கையில் முத்தம் குடுத்ததுக்கு, அந்தப் பொண்ணுக்கே குடுத்துருக்கலாம்..!

ammu August 14, 2009 at 11:25 PM  
This comment has been removed by the author.
ammu August 14, 2009 at 11:25 PM  

Its really superb da..

  ©Template by Dicas Blogger.

TOPO