சில நொடிச் சிந்தனைகள் சில
கீழிறங்கும் கைப்பிடிகளால்
புலனாகும் புதுவாசல்கள்.
கலவிகளும், கதவுகளும்!
-oOo-
பிரிவின் பொங்குநுரைகளில்
உடைந்து தீரா மொட்டுகளாய்
கடந்த நினைவுகள்.
-oOo-
உன் இறகுகளின் அடர்த்தியில்
இலகுவாகின்றன
என் பாறைகள்.
-oOo-
கிளைகள் கைவிட்ட
சருகுகளுடன்
நதியின் பயணம் இனிதே.
-oOo-
என் ஆறுகள் ஒடிகின்றன
உன் நாணல்களின்
கைகோர்ப்புக்கு.
-oOo-
அவளாய்ப் பெய்யும்
மழைக்கு முன்பே
நானாய் வானவில்.
-oOo-
எழுத்தை
வரைகிறது
குழந்தை.
-oOo-
தூறலிடும் நினைவுகளில்
ஈரமறிகின்றன
நீயில்லா வெம்பரப்புகள்
-oOo-
ஒரு அடைசல் பிரசவத்தில்
ஒன்று மட்டும் பெண்பாலாய்
இட்லியில் அம்மா விரல் முத்திரை.
-oOo-
தரையோடெரியும்
கடைசித்துளி மெழுகுடன்
தீர்ந்துகொண்டிருக்கின்றன
ஒரு வாழ்வின் நீட்சிக் கணங்கள்.
11 மறுமொழிகள்:
நொடி சிந்தனைகள் அருமை.. ஒரு சில நன்றாக வந்துள்ளன.. பல, பாதியில் பிரசவமாகியிருக்கிறது...
தொடர்ந்து எழுதுங்கள்..
நல்லா இருக்கு மதன்.
"கிளைகள் கைவிட்ட
சருகுகளுடன்
நதியின் பயணம் இனிதே"
மிகப் பிடித்தது.
உயிரோசைக் கதையும் படித்தேன். நல்லா இருக்கு. நிறைய எழுதுங்கள் மதன். வாழ்த்துகள்.
அனுஜன்யா
//ஒரு அடைசல் பிரசவத்தில்
ஒன்று மட்டும் பெண்பாலாய்
இட்லியில் அம்மா விரல் முத்திரை.//
அருமையிலும் அருமை.
எப்படிங்க இப்படியெல்லாம். என்னமோ போங்க!
//இட்லியில் அம்மா விரல் முத்திரை//
நல்ல நொடி முத்திரைகள்.அழகு....
அன்புடன் அருணா
ஆதவா - வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. அடுத்த முறை நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி அனுஜன்யா. எழுதுகிறேன். நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் அல்லவா.. படிப்பதற்கு..:)
மிக்க நன்றி அப்பு சிவா.
அன்புடன் நன்றி, அன்புடன் அருணா..!
முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!
ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...
முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!
அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?
முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...
நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!
பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!
தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!
வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.
அருமையாய் இருக்கிறது.
நல்லாருக்குங்க மதி. எழுத எழுதக் கைபழகும். தொடர்ந்து எழுதவும்.
வாழ்த்துகளுக்கு நன்றி முரளி மற்றும் ரமேஷ் வைத்யா..!
The 7th one is simply superb..
I have added it to படித்தது / பிடித்தது series in my blog..
http://www.writercsk.com/2009/02/11.html
Hats off..
மிக்க நன்றி சரவணகார்த்திகேயன்..!
Post a Comment