இரண்டு அழகிகள்
அடுத்த வீட்டு அழகியவள்.
காதலும், காமமும்
கணக்கில் வரத் தகாதவை.
அகவை ஐந்தைத் தாண்டியிருக்கமாட்டாள்.
குடும்பத்தைக் குழப்பினாலும்
நால்வருக்கும் நல்லவள்தான்.
அம்மாவை அத்தை என்பாள்.
அப்பாவைத் தாத்தா என்பாள்.
தங்கையை அக்கா என்பாள்.
என்னை மாமா என்பாள்.
ஏதோ ஒரு மாலை நாளில்
எல்லோரின் குழுமத்தில்,
அடர்ந்திருந்த அமைதி குலைத்தவள்
மாமா ஐ லவ் யூ என்றுவிட்டாள்.
சிரமமாய்ச் சிரித்து வைத்தவன்,
உள்ளுக்குள் கோணித்து நெளிந்தவன்
அப்பாவை ஏறிடவேயில்லை.
கொட்டித் தீராத சிரிப்பை
நிறுத்த முற்படாதவராய்
அள்ளியெடுத்துக் கொஞ்சினார் அவளை.
முதன்முதலாய்
தைரியம் தட்டியது.
என் அழகியையும்
ஏற்றுக் கொள்வாரென.
2 மறுமொழிகள்:
அழகான கவிதை !!
வாழ்த்துக்கள் !!
மதி யா இது !!??!!
:-)
மதியேதான்.. ஆனா நீங்க யாருனு தெரியலயே!
Post a Comment