Thursday, December 25, 2008

துப்பல்த் தெறிப்புகள் (அ) நாகரீகத்தின் வண்ணங்கள்

பேருந்தின் ஜன்னல்வழித் துப்பப்பட்டது
நிலத்தில் அழுந்தி நீண்டது
சிவப்புத் தாரையோடு.
சுண்ணாம்பு ஜாஸ்தி.

ஆட்டோ டிரைவர் உமிழ்ந்த
பான்பராக்குப் பிரவுன் திரவத்தில் பாதியை
காற்றென் மடியில் கொண்டு சேர்த்து
பேண்ட்டை உறிஞ்ச வைத்தது.

காறித் துப்பல்களின் வெள்ளை முட்டைகள்
அனைவருக்குமான அம்மாவை ஈரமாக்குவதாய்
நினைக்க நிர்ப்பந்திக்கிறேன்.

வீதியோரமாய் இருந்து வைத்த ஒண்ணுக்கில்
அதிகமான மஞ்சளைக் கவலைப்படுவோமாம்.
திரட்டிய கோழையை
உருட்டித் துப்பவா யோசிப்போம்?



2 மறுமொழிகள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் January 2, 2009 at 11:44 AM  

நல்லா வந்திருக்குங்க.

மதன் January 3, 2009 at 4:04 AM  

Hyyo.. சாரு சார் அடிக்கடி "என் எழுத்துக்கு ஆதரவாக இருப்பவர்கள்"-னு சொல்ற list-ல எப்பவும் இருக்கிற அதே சுந்தரா?

உங்க பாராட்டுதலுக்கு ரொம்ப நன்றி சுந்தர்.. நேரம் கிடைக்கும்போது வந்து பாத்து கருத்து சொல்லுங்க.. என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு encouragement-ஆ இருக்கும்..!

  ©Template by Dicas Blogger.

TOPO