ஓவியத்தின் கண்
உள்ளாடைக்குள் உருண்டு கொண்டிருந்த
நிர்வாணம் திசையறு வடிவில் நீண்டிளகி
முகத்தின் பரப்பில்
வெளிறி முடிவுற்றது
பாகங்களைக் குறித்த பிறகு
கண்ணின் படம் வரையத் துவங்கும்
குருடனின் ஓவியத்திலிருந்து
உதிரத் துவங்கின கண்கள்
நேற்று பெய்ததும்,
இன்று பெய்வதும் பொதுவாய்
மழையென்றுணர்ந்தாலும்
அவை வேறென்றறியத்
தேவை
உதிரிக் கண்களில்
நனையாதவொன்றை
மழையென்றழைத்தலில்
இல்லாதவுண்மை
5 மறுமொழிகள்:
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
கவிதை அருமை...
ரொம்ப நல்லாயிருக்கு.
சே.குமார் மிக்க நன்றி.
பிரஷா - நன்றி.
வெறும்பய - நன்றி!
//உள்ளாடைக்குள் உருண்டு கொண்டிருந்த
நிர்வாணம் திசையறு வடிவில் நீண்டிளகி
முகத்தின் பரப்பில்
வெளிறி முடிவுற்றது//
அருமை நண்பரே.
Post a Comment