முலைக்கடிகை
கைகளாலும்,முலைகளாலுமான
இரு பரிமாணம்
காலத்தோடுமியைந்து
முப்பரிமாணமானது
இப்போதாவெனத் தெரியவில்லை
ஆனாலும்
தீரத் தீரத்
திருப்பி வைக்கும்
பதைப்பில்லாத கைகள்
தளர்தலில் ஆழ்ந்திருந்தன
ஏனென்றால்
மேசையில்
நேர்குத்தாக நிறுவப்பட்டிருக்கும்
உனதிரு முலைகளினிடையே
சன்னமாய்
உதிர்ந்து கொண்டிருக்கும்
நம் பிரியத்தின் பொன் துகள்கள்
நின்றுபோகும் அளவை
காலத்துக்குள்
காலமாகி விட்டதால்.
3 மறுமொழிகள்:
கவிதை அருமை
நன்றிங்க THOPPITHOPPI!
கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியல... ஆனாலும் கவிதை நடை அருமை..
Post a Comment