வார்த்தை விளையாடாமை - 5
காதலி.. என்றழைத்தேன்.
பெயர்ச்சொல்லா..
வினைச்சொல்லா.. என்றாள்.
இரண்டும்.. என்றேன்.
பின்னொரு சமயம்
காதலா.. என்றழைத்தாள்.
நானும்
பெயர்ச்சொல்லா..
வினைச்சொல்லா.. என்றேன்.
அசடு.. இதிலென்ன சந்தேகம்..
என்று சிரித்தாள்..
என்ன செய்ய?
மொழி கூட
அவள் பக்கம்தான்.
5 மறுமொழிகள்:
:-)))))
அட ஜூப்பரு.. :)
:)
very sweet!!
மோகன் - நன்றி
அஷோக் - நன்றிங்கோவ்..
அன்பின் அப்துல்லா - நானும் :)
Thank you Sharadha ka! :)
Post a Comment