திட்டமிட்டதொரு விபத்து
விடையைத் தேடியலைந்த
பாதையின் ஒரு திருப்பத்தில்
குறிக்கப்பட்டிருக்க வேண்டும்
சம்பவம் அரங்கேற வேண்டிய இடம்
உயிர் பிழைப்புகள்
இல்லா வண்ணம்
கச்சிதமாக நிகழ்ந்து விடல் நலம்
முடமாகிப் போதலென்பது
பிறிதொரு திட்டத்திற்கான
காத்திருப்பே
சக்கர நாற்காலிகளின்
கருணா சுழற்சிகளால்
பயனில்லை
அடையாளங் காண
முடியாததாகக் கசகசத்துப்போன
முகத்துக்காரர்கள்
பாக்கியவான்கள்
பொதுக் கழிப்பிட யூரினலில்
ஒட்டியிருக்கும்
சுருண்ட ஒற்றை மயிராய்
பார்க்கப்படுதலை விட
5 மறுமொழிகள்:
//பொதுக் கழிப்பிட யூரினலில்
ஒட்டியிருக்கும்
சுருண்ட ஒற்றை மயிராய்
பார்க்கப்படுதலை விட//
நச்!
நன்றி நேஸ்!
எதார்த்தமான உதாரணங்கள் கூட வலி நிரம்பியவையாகத்தானே உள்ளன!
வரிகளில் வழியும் விரக்தி மனதில் இல்லாதிருக்கட்டும்!
கவிதை எனக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது!
வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு மதன்
சு.சிவக்குமார் - வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி!
அஷோக்கண்ணா - நன்றி! :)
Post a Comment