வார்த்தை விளையாடாமை - 4
தொலைபேசிக் கொண்டிருந்தேன்
அவளுடன்
அவள் பேசுவதையெல்லாம்
அவளின் துடுக்குத் தோழி
அவளைப் போலவே
திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது
எனக்கும் கேட்டது
திரும்பச் சொல்ல முடியாதபடி
'என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ'
என்று சொல்லச் சொன்னேன்
எவளிடமும் அவள்
தோற்கக் கூடாது
என்ற ஆணவத்தில்
தோழி சொல்ல முடியாதபடி
எதுவுமே சொல்லவில்லை அவள்
எவரிடமும் என்னைத்
தோற்கக் கூடாது
என்ற அன்பில்..
4 மறுமொழிகள்:
cute :)
நன்றிங் இராமசாமி கண்ணன்!
கவிதை நன்றாக இருக்கிறது!
மரத்திலிருந்து மலர்கள் விழுவதுபோல் அவ்வளவு இயல்பாக அம்ர்ந்திருக்கிறது..வரிகளும்,வார்த்தைகளும். நல்ல வெளிப்பாடு..மேலும் தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment