நானிற்குள் பதுங்கும் விலங்கு
ஒரே மொடக்கில்
அன்பின் இறுதிச் சொட்டுவரை
உறிஞ்சி விட எத்தனிக்கும்
வாய்களை நிரப்பத்
தினவெடுத்தவிரு முலைகளில்லாதது
என் நான்
மடியில் தலை வைத்த காலத்துக்கு
திதியாகி விட்டது
தலையில் மடி வைத்துப்
பாளம் பாளமாய் வெடித்துக்
கிடந்த வெக்கைப் பரப்பின்
அருகம்புற் பனித்துளியில்
முகம் பார்க்கையில்
தலையில் வைத்திருந்த
மடிக்குள்ளேயே உறிஞ்சப்பட்டது
முழுவுடலும்
முனை மழுங்கிய
கோரைப்பற்களை மறைக்க முற்படுகிறது
நானிற்குள் பதுங்கிய
விலங்கொன்று
நன்றி: கீற்று
7 மறுமொழிகள்:
நல்லா இருக்கு மதன்
நன்றிங்க நேஸ்!
ரொம்ப நல்லாயிருக்குங்க மதன்... நன்றி யாத்ரா :)
போட்டோ பயமுறுத்துது.. சின்ன பையன் நானு, பாத்து போடுங்க
அஷோக்-
நீங்க நல்லாருக்குனு சொல்லிட்டிங்கனா அதுக்கு மறுபேச்சே இல்ல. :)
ஃபோட்டோ.. நீங்க சின்னப் பையனா..? அப்போ நானு.. பச்சிளங் குழந்தையா..?
ஆமா.. யாத்ராவுக்கு எதுக்கு நன்றி..? என்னப் பத்தி என்ன சொன்னார்..? :)
பின்னூட்டம் போட்ட ஸ்டயிலு.. யாத்ராவினுடையது... அதான் :)
Post a Comment