மல்லாந்து கிடக்கும் வானம்
மானஸ கங்கையில் கரையொதுங்கிய
பிரேதங்களில்
முன்பு வலது கண்ணிருந்த
துளையினுள் ஊர்ந்து சென்றது
உறுமீனொன்று
தான் பார்த்தவைகள் குறித்தான
பீதியில் விசும்பினார்கள்
பிரேதங்கள்
நதியின் முற்றத்தில்
பௌர்ணமி நாளின் பகற்பொழுதுக்காக
அழுது கொண்டிருந்தவனுக்கு
இந்தக் கவிதையை
எழுதாதவனின் சாயலிருந்தது
மல்லாந்து கிடக்கும்
ஆகாசத்தின் மீது
காறியுமிழ்ந்தது பூமி
நன்றி: கீற்று
6 மறுமொழிகள்:
வித்தியாசமான பார்வை மதன்
நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லாருக்கு மதன்!
இந்தக் கவிதையில் இருக்கும் திணை மாற்றங்கள் வசீகரம்
நன்றி கதிரவன்.
நன்றி Madurai Saravanan.
நன்றி பா.ரா! என்னையும் ’மக்கா’னே கூப்பிடுங்களேன். :)
நன்றி நேஸ்!
அஷோக் - ஸ்மைலியப் போட்டாச்சா.. ரைட்டு!
நல்ல முயற்சி நண்பரே
Post a Comment