Thursday, March 11, 2010

வாழ்க்கை வண்டி


மின் விசிறிக் காற்றுக்கும்,
சன்னற் திரைச் சீலைக்கும்
பிறந்து கொண்டிருக்கும்
வெளிச்சக் கீற்றுகள்

உறக்கம் புணராத கண்கள் மூடி
இமைக்குள் இருக்கும் இருட்டைப்
பார்த்துக் கொண்டிருப்பேன்

அணிச்சையாய் ஆரம்பித்து
அன்றுக்கான சலிப்புகளை
அசைபோட்டு ஓய்கையில்

எப்படி இன்றை விட தீர்க்கமாய்
நாளைகளை நம்புகிறேன் இன்னும்
என்பது தெரியாது

நம்பிக்கை கொள்வதை விட
நம்பிக் கொள்வதென்பது
பாதுகாப்பானதா
என்ற பிரக்ஞை இல்லாமலே

நன்றி: உயிரோசை



6 மறுமொழிகள்:

பிரதீப் March 11, 2010 at 4:26 AM  

romba nalla ezhuthureenga mathan, kavithaigalum, katturaigalum arumai! ungal pathivugalil naan ennaiye neriyya paarkiren!

நேசமித்ரன் March 11, 2010 at 4:32 AM  

அணிச்சை?

அடிக்கடி புணர்தல் என்பதை வாசிக்க கிடைக்கிறது உங்கள் கவிதைகளில் ..
:)

நல்ல கவிதை
வாழ்த்துகள் மதன்

யாத்ரா March 11, 2010 at 10:13 AM  

ரொம்ப நல்லா இருக்கு மதன், நான் ரொம்ப நாள் வலைப்பக்கம் வராததால் இப்ப தான் உங்க முந்தைய கவிதைகளும் படித்தேன். ரொம்ப நல்லா இருக்கு மதன். வாசிப்பின்பம்.

Ashok D March 11, 2010 at 10:52 AM  

நல்லாயிருக்கு... ஆனா உங்க லெவல்ல இல்லையே..

மதன் March 11, 2010 at 11:44 AM  

ரொம்ப நன்றிங்க பிரதீப். கொஞ்சம் அதிகம் பாராட்டிட்டிங்களோனு தோணுது! :)

அன்பின் நேசமித்ரன் - அனிச்சை என்று இருந்திருக்க வேண்டுமா?

புணர்தல் - ஒருவேளை என் வயசு அப்படியோ?!

பாராட்டுக்கு நன்றி.

யாத்ரா - புதுமாப்ளைக்கு வலைப்பக்கம் வரவெல்லா நேரமிருக்குமா? :)

சாரி யாத்ரா.. என்னால திருமணத்துக்கு வர முடியல..

நிறைந்ததொரு வாழ்வமைய வாழ்த்துகள்! :)

தல அஷோக்! - எனக்கெல்லாம் என்ன தல லெவலு.. அப்படியே வர்றதயெல்லாம் எழுத வேண்டியதுதான்.. ரொம்ம்ப சிலது தான் தேறுது.. :(

vidivelli March 13, 2010 at 9:51 AM  

நல்லா இருக்கு மதன்.

  ©Template by Dicas Blogger.

TOPO