Tuesday, January 26, 2010

போர்களுக்கு முந்தைய விருந்துகள்



போர்களுக்கு
முந்தைய விருந்துகள்
சுவாரசியமானவை

கைசேரும்
குவளைகள் நிரப்பும் துளிகள்
உவர்த்த உதடுகளில்
வெண்மைப் படிகமாகி
உலர்வதும்

பின்சேரும்
கரங்கள் அழுந்த
உடையத் தயாராய் இருக்கும்
நினைவின் குமிழிகள்
மௌனம் சுரந்து
முட்டிக் கொள்வதும்

அடரும் இறுக்கம்
விரிய வழியின்றி
இணை சேர்ந்து கிடந்த
கண்ணலைவரிசைகள்
எதிர்கோட்டில்
வலுந்தூர்தலும்

இன்னபிற
இன்னபிற
உம்களும்
உம்களும்..

விருந்துகளின் முடி தருணங்களில்
போதையுற வீழ்ந்து விடல்
உத்தமமான
போதனையாகப் படுகிறது

பொழுதோடு வியர்த்த
பிரியுயிரை எதிர்நோக்க உதவும்
சூனிய சலனங்கள்

எதிராளியும் அயர்ந்திருக்கும்
அவன் விருந்தின்
நிச்சலனம் செவிசேர

விரல்கள் மட்டும்
பின்னியிருக்கும்

போர்களுக்கு
முந்தைய விருந்துகள்
சுவாரசியமானவை



25/01/2010 உயிரோசை மின்னிதழில் பிரசுரமானது



2 மறுமொழிகள்:

Ashok D January 27, 2010 at 9:35 PM  

//பிரியுயிரை//

நான் தடுக்கி விழுந்த வார்த்தை..மத்ததெல்லாம் ...nice flowing :)

மதன் February 5, 2010 at 10:28 PM  

அஷோக் -

நன்றிங்க!

  ©Template by Dicas Blogger.

TOPO