நீரை அறுக்கும் வெயில்
செஞ்சாந்து கவிந்து கிடந்த
பளிங்கு வீதியில் நடந்து வந்த
ஒளிப்புள்ளி ஒன்று
முகவரியாகித் தொலைந்து போன
தன் கதை சொன்னது
அறுபடப் போகும் நீரிற்காய்
சாணை தீட்டிக் கொண்டிருந்த
வெயிலைப் பார்த்த அச்சத்தை
மறைத்து மறைத்து..
கதை முடிந்தவாக்கில்
வாழ்வின் தாத்பர்ய ரகசியத்தை
ஒழுக்கிக் கொண்டே
தன் பாதையில்
பதங்கமாகத் துவங்கியது
உடன் சில
சொல்லப்படாத கதைகளும்
2 மறுமொழிகள்:
தனித்துவமான படைப்பு
http://kavikilavan.blogspot.com/
நன்றி யாதவன்!
Post a Comment