Monday, June 28, 2010

விகடனில்!

ஜன ரஞ்சகமான ஒரு எழுத்து ஊடகத்தின் ஓரத்தில், ஒரே ஒரு கவிதை வந்ததற்கே துள்ளிக் குதித்த மனதைக் கண்டபின், பாப்புலாரிட்டி எனும் போதைக்காக மசாலாப் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹீரோக்களின் மீதான என் கோபத்தின் அர்த்தமின்மையை உணர்ந்தேன் ஒரு மாதத்திற்கு முன்பு என்னுடைய ஒரு கவிதை விகடனில் பிரசுரமானபோது!

சுகுணாவின் முகவரி தந்து, கவிதைகள் அனுப்பச் சொன்ன பா.ரா-வுக்கும், சுகுணாவுக்கும் நன்றி.


இனி கவிதை!


சாகா முத்தங்கள்


உன் முத்தத்துக்கும்,
முத்தத்தின் சத்தத்துக்கும்
நடுவே நான்
செத்து விட வேண்டும்
என்றேன்


சத்தம் வராத முத்தங்களில்
சாகா வரமளிக்கிறாள்
அன்று முதல்!



10 மறுமொழிகள்:

க ரா June 28, 2010 at 8:10 PM  

ரொம்ப நல்லாருக்குங்க.

நேசமித்ரன் June 28, 2010 at 8:13 PM  

விகடனுக்கு ஏற்ற கவிதைகள்!!!

வாழ்த்துகள்

Katz June 28, 2010 at 8:41 PM  

மிகவும் அருமை

ஜெட்லி... June 28, 2010 at 8:59 PM  

சூப்பர்...டச் பண்ணீட்டிங்க...

☼ வெயிலான் June 28, 2010 at 9:21 PM  

வாழ்த்துக்கள் மதன்!

மதன் June 29, 2010 at 1:28 AM  

இராமசாமி கண்ணன் - நன்றி

அன்பின் நேஸ் - வாழ்த்துக்கு வழக்கம் போல நன்றி. :)

வழிப்போக்கன் - நல்ல பேருங்க.. நன்றி

ஜெட்லி - நன்றிங்க.

வெயிலாண்ணன் - நன்றிங்க. அடிக்கடி வாங்க. :)

உலவு - நன்றி.

Ashok D June 29, 2010 at 1:57 PM  

சோக்கா சொல்லிகினபா .. பொஸ்தகத்தல வந்துகினதுக்கு வால்த்துகளு :)

மதன் June 29, 2010 at 4:21 PM  

நன்றிங்க அஷோக்! :)

cheena (சீனா) July 1, 2010 at 7:45 AM  

அன்பின் மதன்

விகடனில் வெளிவந்த கவிதைக்குப் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

ஒரு நிகழ்வினிற்கும் அதன் விளைவினில் ஏற்படும் சிந்தனைக்கும் ஒரு கவிதை. அருமை அருமை - முத்தம் அதன் சத்தம் அதிலேயே செத்து விட ஆசையா......ம்ம்ம் ஆசையினை நிறைவேற்றாத ( சுய நலமுடன் ) தோழி வாழ்க !

நட்புடன் சீனா

  ©Template by Dicas Blogger.

TOPO