Saturday, June 26, 2010

நிழற்படம் ஒன்றும், நிஜப்பாடல் ஒன்றும்!

மிகச் சாதாரணமாகக் கடந்து போக வேண்டிய தருணமொன்று எதிர்பாராமல் அடர்வேறி, நம்மைப் புரட்டிப் போட்டு விட்டு அருகேயே நின்று மலங்க மலங்க விழிக்குமே உணர்ந்திருக்கிறீர்களா? அந்த ஒரு கணத்திற்கு முன்னாலிருந்த லாவகம் எங்கே தொலைந்ததென்று புரியாமல், கூட்டத்தில் கையைத் தொலைத்த குழந்தையாய் தவிக்கும் தருணங்கள் நினைவிருக்கிறதா?

அலுவலகம் முடிந்து எப்பொழுதும் இண்டிகாவிலோ இல்லை சுமோவிலோ வருவது வழக்கம். நேற்று நமக்கென்று வாய்த்தது ஒரு டெம்போ ட்ராவலர். இது சற்று பெரிய வண்டியாதலால் தெருக்கோடியில் தான் இறங்கிக் கொள்ள வேண்டும். இரவு ஒரு மணி. நான் பாட்டுக்கு இறங்கி நடந்து போய்க் கொண்டிருக்கையில்தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

காட்சி புரியவே சில நொடித் துளிகள் பிடித்தன. புலப்பட்ட பின் அலையலையாய் கொட்ட ஆரம்பித்த எண்ணக் குழைச்சல்களிலிருந்து விடுபட சில நிமிடங்கள் தேவைப்பட்டன. முன்னர் நானே எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. பகிர்தலின் தளத்தில்தான் வாழ்வு பல்கிப் பெருகுகிறதென்று.அப்படியே நின்று விட்டேன். புகைப்படம் எடுக்கையில் ஏனோ சற்று உறுத்தியது. என்னதான் இது போன்ற ஆயிரம் புகைப்படங்கள் இணையத்திலும் இன்ன பிற ஊடகங்களிலும் காணக் கிடைக்கும் என்றாலும், நாமே நேரில் கண்டடையும் அனுபவம் சிலிர்க்கத்தான் வைத்து விடுகிறது.

அந்த நைந்து போகாத கம்பளிக்குள் நாய்க்கும் தஞ்சமளித்த நவயுக புத்தனை, அவர் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. கம்பளியை விலக்கி இரண்டு தூக்கங்களைக் கெடுக்க மனமிலையாதலால் வந்து விட்டேன்.

அதிகாலைக் குளிரில், பிளாட்பாரத்தில் எல்லாவற்றையும் மறந்து தூங்கும் மனசு வாய்க்கப் பெற்றதே.. அது போன்றதொரு இலகுவை எனக்கும் தர மாட்டாயா என்று முன்னாலிருந்த பிரசன்ன ஆஞ்சநேயரைக் கேட்டு விட்டு வந்தேன். வேறென்ன செய்ய?

-0-

ஆங்கிலப் பாடல் எதுவும் இதுவரை நான் கேட்டதில்லை. முதல்முறையாக ஷகிராவின் வக்கா வக்காவைக் கேட்டுவிட்டுப் பித்துப் பிடித்தாற் போலாகியிருக்கிறேன். என்னா பாட்டு.. என்னா வரிகள்.. And ofcourse.. என்ன்னா ஒரு ஆட்டம்.. வாய்ப்புகளே இல்லை!

நேற்று தொட்டு, இன்று மட்டும் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே தெரியாது. முழுவதுமாய் வசீகரித்து எனை தனக்குள் விழுங்கி விட்டது இந்தப் பாடல். ஷகிராவுக்கு 33 வயதாம். என்னால் நம்பவேஏஏ முடியவில்லை. ஷ்ருதிஹாசன் சரீரத்திலும், சாரீரத்திலும் ஷகிராவின் சாயல் தென்படுவதாகத் தோன்றுகிறது.இணையத்தின் புண்ணியத்தில் வரிகள் பின்வருமாறு:

You're a good soldier
Choosing your battles
Pick yourself up
And dust yourself off
And back in the saddle

You're on the frontline
Everyone's watching
You know it's serious
We're getting closer
This isnt over

The pressure is on
You feel it
But you've got it all
Believe it

When you fall get up
Oh oh...
And if you fall get up
Oh oh...

Tsamina mina
Zangalewa
Cuz this is Africa

Tsamina mina eh eh
Waka Waka eh eh

Tsamina mina zangalewa
Anawa aa
This time for Africa

Listen to your god
This is our motto
Your time to shine
Dont wait in line
Y vamos por Todo

People are raising
Their Expectations
Go on and feed them
This is your moment
No hesitations

Today's your day
I feel it
You paved the way
Believe it

If you get down
Get up Oh oh...
When you get down
Get up eh eh...

Tsamina mina zangalewa
Anawa aa
This time for Africa

Tsamina mina eh eh
Waka Waka eh eh

Tsamina mina zangalewa
Anawa aa

Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
This time for Africa

கால்பந்துக்கு மட்டுமல்ல. சில சூறாவளி சமயங்களில் நம் கிளைகளை மீட்டெடுக்கவும் உதவும் வரிகள். அதிலும் But you've got it all.. Believe it..  என்ற வரியைப் பாடும்போது நெடுமட்டமாய் அசையும் ஷகிராவின் முகம் தரும் தன்னம்பிக்கையை எழுதி விளக்க முடியுமென்று தோன்றவில்லை. பார்த்து வேண்டுமாயின் உணரலாம்.

இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட முயலும் செம்மொழி வீடியோவைக் காட்டிலும், சத்தியமாய் 100 மடங்கு பரிந்துரைக்கலாம்.

பாடலைக் காண க்ளிக்கவும்!2 மறுமொழிகள்:

Karthikeyan G June 29, 2010 at 10:13 PM  

நிழற்படம் ஒன்றும்,--
ஆம், இதுபோன்ற தருணங்களை சந்திக்கும்போதும் கேள்விப்படும் போடும் கண்களில் நீர் கோர்ப்பதை தவிர்க்க முடிவதில்லை..


நிஜப்பாடல் ஒன்றும்! --
'Waving flag பாடலை கேட்டதில்லையா, படு அட்டகாசம் சார்.. கறுப்பினத்தின் பாடலாய் மனதை கொள்ளை கொள்கிறது.. hearing 'Waving falg' in a loop for past 1 week. :-)

"When I get older, I will be stronger
They'll call me freedom
Just like a wavin' flag
And then it goes back
And then it goes back
And then it goes "

மதன் June 29, 2010 at 10:20 PM  

கண்டிப்பாகக் கேட்கிறேன் கார்த்திகேயன். பகிர்தலுக்கு நன்றி.

  ©Template by Dicas Blogger.

TOPO