Sunday, May 10, 2009

சில நொடிச் சிந்தனைகள் சில

சர்க்கரை டப்பாவுக்குள்
செத்துக் கிடந்தது
எறும்பு.

-o0o-

7 மணி. தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
பதறியடித்து எழுந்தாள்
ரிமைண்டர் அடித்தவுடன்.

-o0o-

முன் சீட்டில் அவருடன்
அழகாக வேடிக்கை பார்க்கும் பிரவுனி.
மனைவி விவாகரத்தாகியிருந்தாள்.

-o0o-

பாஸ்வோர்டாய் காதலி பெயர்.
ஒவ்வொரு மெயில் ஐடிக்கும்
வேறு வேறாய்.

-o0o-

சௌந்தர்ய லட்சுமி
கிழிந்து வழிந்தாள்
ATM குப்பைக்கூடையில்.

-o0o-

மொத்த அபார்ட்மெண்ட்டுக்கும்
Happy New Yearக் கோலம் போட்டிருந்தாள்
வேலைக்காரி.

-o0o-

அமெரிக்க நாயின்
குரைப்புச் சத்தம்
கான்ஃப்ரன்ஸ் காலில்.

-o0o-

நடுவீதியிலொரு
கவன ஈர்ப்புத் தீர்மானம்
நைட்டிக்கு மேல் துண்டு.

-o0o-

சிமெண்ட் ரோட்டில்
சில கால்தடங்கள்
அவசரம் ஆறிப்போய்.

-o0o-

தண்டவாளத்தில்
மலமாக
ரயிலின் நன்றி.



7 மறுமொழிகள்:

KRICONS May 10, 2009 at 1:05 AM  

அட்டகாசம்... கலக்குறீங்க...

வாழ்த்துகள்

சென்ஷி July 4, 2009 at 6:20 PM  

நல்லாயிருக்குது மதன் :)

மதன் July 5, 2009 at 1:12 PM  

நன்றி சென்ஷி..!

பிரவின்ஸ்கா July 16, 2009 at 9:07 PM  

//பாஸ்வோர்டாய் காதலி பெயர்.
ஒவ்வொரு மெயில் ஐடிக்கும்
வேறு வேறாய்.
//

//நடுவீதியிலொரு
கவன ஈர்ப்புத் தீர்மானம்
நைட்டிக்கு மேல் துண்டு. //

நல்லாருக்கு
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

மதன் July 17, 2009 at 8:44 AM  

உங்கள் வருகையும், பாராட்டும் மகிழ்வைத் தருகிறது பிரவின்ஸ்கா..

  ©Template by Dicas Blogger.

TOPO