உச்சம் அடைதல்
காமித்தும், மோகித்தும்,
தொடர் முங்கல்களில்
முத்திழந்தும் கிடந்த
இரவொன்று
விரல்முனைத்
தொடுதல்களில் தொடங்கிய
சரீர நகர்வுகள்
உயிர்களின் உராய்வுகளானதில்
சிதைவுற்றிருந்தன
முகாந்திரங்கள்
இயங்குதல் நிறுத்திவைக்கப்பட்ட
ஒருசில அணிச்சை நொடிகள்
இருபாலுடற் திரவங்களின்
உச்சகட்ட வீச்சங்களைக்
காட்டக் காத்திருக்கலாம்
ஞாயிறு என்பது கண்ணாக
பாடச் சொன்னாள்
ஏனோ.
நீ பார்த்த பார்வைக்கொரு
நன்றியும் பகர்ந்தேன்
தூங்கிப் போயிருந்தோம்.
தலை கலக்கீட்டீங்க !
//முங்கல்களில் // முனங்கல்களில் ??
விரல்முனை - இந்த வார்த்தை புதிது..
ஆமா உங்களை பார்த்தால் கல்யாணம் ஆனா மாதிரி தெரியலையே ! எப்படி இது கேள்வி அறிவா ? :)
வாங்க தல.. அது முங்கல்கள் தான்.. முனகல்களில்ல..!
நீங்க வேற.. நான் சின்னப் பையன்ங்க.. கல்யாணம் எல்லாம் ஆகல..!
நல்ல வேளை.. கேள்வி அறிவானு கேட்டீங்க..
//கல்யாணம் ஆனா மாதிரி தெரியலையே ! எப்படி இது?//-னு கேக்கல..! :)
யூத் விகடனில் லிங்க் பிடித்து வந்தேன். காமக்கடும்புனலில் குளித்தேன்.கோவை / பெங்களூர் ?! கோயம்புத்தூர் என்றால் சந்திக்கலாமே...
நன்றி செல்வேந்திரன்..! பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவை.. தற்சமயம் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறேன்.. கோவைக்கு மாதத்திற்கொரு முறை வருவதுண்டு.. உங்களுக்கு நேரமிருந்தால் அடுத்த முறை வருகையில் நிச்சயம் சந்திக்கலாம்..!
மதன்
ரொம்ப நல்லாருக்கு இந்த கவிதை..இயங்குதல் நிறுத்தி வைக்கப்பட்ட நொடி இது உச்சத்தையும் இரு பாலுடற் திரவங்கள் இது வீழ்ச்சியையும் சரியா சொல்லுது..பொருத்தமான பாடல் தேர்வுகளும்
அட்டகாசம் :)
அருமை மதன்
கலக்கல் அண்ணணன்..!
அதெப்படி அந்த பாடலை தெரிவு செய்தீர்கள் :)
சுகம்...ம்
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்
தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம்.
மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
நன்றி.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அய்யனார் :)
நன்றிங்க முரளிகண்ணன் மற்றும் தமிழன்-கறுப்பி.
////இயங்குதல் நிறுத்திவைக்கப்பட்ட
ஒருசில அணிச்சை நொடிகள்
இருபாலுடற் திரவங்களின்
உச்சகட்ட வீச்சங்களைக்
காட்டக் காத்திருக்கலாம்////
அசந்தேன்.....
நல்ல சொற்கட்டு... பிரயோகங்கள் அழகு.....
நன்றி ஆதவா..!
நல்லா இருக்கு மதன் :)
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா..!
நல்லா வந்திருக்கு கவிதை.
நீங்க சொன்னா சரி தல..! :)
Post a Comment